வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சாகுறதுக்குள்ள இப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கணும்.. நிறைவேறாத ரகுவரனின் ஆசை

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ரகுவரன். ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, மிரட்டல் வில்லனாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே தன்னுடைய பாணியில் செய்து கொடுக்கும் திறமை படைத்தவர்.

ரகுவரன் நடிப்பில் முத்திரை பதித்த மாதிரி பல படங்களை சொல்லலாம். அதில் முதல்வன், பாட்ஷா போன்ற படங்களில் இடம்பெற்ற ரகுவரன் வில்லன் கதாபாத்திரங்களில் இன்றும் ரசிகர்களின் பேவரைட் காட்சிகளாக உள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து பெயர் பெற்றவர் ரகுவரன். சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இறப்பதற்குள் ஒரு முறையாவது திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை ரகுவரனுக்கு இருந்ததாம்.

அந்த கதாபாத்திரம் அவ்வளவு சவாலானது எனவும், ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இரண்டையும் கலந்து நடிக்கும் சவால்மிக்க அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என தன்னுடைய நண்பர் பப்லு பிரித்திவிராஜ் என்பவரிடம் தெரிவித்தாராம்.

பப்லு பிரித்திவிராஜ் அஜித் நடிப்பில் உருவான அவள் வருவாளா படத்தில் சிம்ரனின் கணவராக நடித்து பெயர் பெற்றவர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். சீரியல்களிலும் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவரும் ரகுவரனும் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே நல்ல நண்பர்களாம். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது பப்லு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

raguvaran-cinemapettai
raguvaran-cinemapettai

Trending News