தமிழ் சினிமாவில் இசைக்கென தனி இடம் எப்போதும் உண்டு. இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துல யாரும் இல்லை. டி.எம்.எஸ், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா எல்லாரும் நம் காதுகளுக்கு தேன் விருந்து கொடுத்துருக்காங்க.
அந்த வரிசையில் தற்போது அனிருத், ஜிவி-லாம் அசைக்க முடியாத சக்தியா தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரம் ஜெய்த்து கொடிகட்டி பறந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரோட கதையில், ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு. பாக்யராஜ் கண்ணன் ‘பென்ஸ்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசை, 20 வயதான சாய் அப்யங்கர். ஏற்கனவே அவர் ஒரு பாடலை எழுதி இசையமைத்துள்ள ‘கட்சி சேர’ என்னும் பாடல் spotify-யில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஏற்கனவே ‘ஆச கூட’ என்னும் பாடல் ஹிட் அடித்தது.

அதுவும் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அனிருத் பாடல்களை ஓரங்கட்டி ட்ரெண்டிங்கில் உள்ளதால் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். எந்த இசையமைப்பாளராக இருந்தால் என்ன இசை அருமையாக இருந்தால் கேட்டுற வேண்டிதான்!