மலையாள சினிமாவில் கூடை வீடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் ரஷின் ரகுமான். இவர் அபுதாபியில் பிறந்து கேரளா மற்றும் பெங்களூரில் வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார்.
ரகுமான் நிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். பிறகு தமிழில் பல படங்கள் நடித்துள்ளார் அதிலும் அவர் நடித்த புது புது அர்த்தங்கள் திரைப்படம் ரகுமானுக்கு பெரிய வரவேற்ப்பை தந்தது.
இப்படத்தில் எஸ்பிபி பாடிய கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. 1999இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான் நடித்த சங்கமம் படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தது. பில்லா, சிங்கம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2016இல் இவர் நடித்த துருவங்கள் பதினாறு படத்திற்காக எம்ஜிஆர்,சிவாஜி அகடமி அவார்ட்,மெட்ராஸ் டெலிவிஷன் அவார்ட் பெற்றுள்ளார். ரகுமான், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ராபானுவின் தங்கை மெக்கருநிஷாவை 1993-ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரிஷிதா, அலிஷா என இரு மகள்கள் உள்ளனர். ரகுமானின் அம்மா சாவித்திரி சமீபத்தில் தவறினார். ரகுமான்,கே பாலச்சந்தர் இயக்கத்தில் காதல் பகடை என்ற சன்டிவி தொடரிலும் நடித்துள்ளார்.
சர்வாதிகாரி, ஜனகணமன, நாடக மேடை, துப்பறிவாளன்2 திரைப்படங்களில் ரகுமான் நடித்து வருகிறார். மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மதுராந்தகராக நடிக்கிறார்.