ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

4 ஆண்டுகளுக்குப் பின் ராகுல் டிராவிட்டிற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு.. ஆல் ஏரியா தலைவன் தான் கில்லி!

ராகுல் டிராவிட் ஒரு சகாப்தம்! இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் என்ற ஒருவர் இல்லை என்றால் நிச்சயமாக ராகுல் டிராவிட் தான் அந்த இடத்தில் இருந்திருப்பார்.

பல போராட்டங்களுக்கு பிறகு இந்திய அணியில் தேர்வானார் ராகுல் டிராவிட். ஆரம்பத்தில் “வில்ஸ்” உலக தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.1996ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதன்முதலாக டிராவிட் களமிறங்கினார்.

ஆனால் 3 ரன்களில் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் அவுட்டானார். அடுத்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். ஆரம்பமே அவருக்கு கொஞ்சம் சறுக்கல் தான். அதற்குப்பின் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து நன்றாக விளையாடி பல சாதனைகளை படைத்தார். இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டிராவிட். தற்போது மங்களூரில் ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமியை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று இந்திய அணியில் விளையாடி வரும் இளைஞர்கள் பலரும் ராகுல் டிராவிட்டிடம் பயிற்சி பெற்றவர்களே.

ஒருமுறை ஸ்காட்லாந்து கிரிக்கெட் யூனியனின் தலைவர் ஜோன்ஸ், அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட்டிடம், எங்கள் நாட்டு கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் அதற்கு இந்திய அணியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் எங்கள் அணியில் வந்து விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஜான் ரைட் நீங்கள் ராகுல் டிராவிட்டை அழைத்துச் செல்லுங்கள் அவர் உங்களுக்குப் பெரிதும் உதவுவார் என்று கூறியுள்ளார்.

அவர் அழைப்பை ஏற்றுக்கொண்ட ராகுல் டிராவிட் 2003ஆம் ஆண்டு ஸ்காட்லாண்ட் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 600 ரன்களை குவித்து 66.66 என்ற சராசரியை பெற்றுள்ளார். மேலும் ஸ்காட்லாந்து அணிக்கு பல விதமான பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின் ஸ்காட்லாந்து அணி ஒரு வலிமையான அணியாக உருவாகியது என்று கூட சொல்லலாம்.

rahuldravid-Cinemapettai.jpg
rahuldravid-Cinemapettai.jpg

அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து ராகுல் டிராவிட் 2007 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஸ்காட்லாந்து சென்றுள்ளார். அப்போது ஸ்காட்லாந்து மக்கள் டிராவிட் செய்த உதவியை மறக்காமல் அவருக்கு அங்கே நல்ல வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளனர் . இதனை தற்போது நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட் இதை நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News