வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பொல்லாததை சொல்லி அஜித் படத்தில் நடிக்க போட்ட தடை.. 15 வருடத்திற்கு பின் கிரஷ் நடிகர் சொல்லிய உண்மை

Rahuman misunderstood Ajith in bill movie: சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனை எதிர்த்து வாதாடி இருப்பார் ஒரு புலவர்.  அதை போன்று அஜித்தும் பொது வாழ்க்கையில்  தமிழ் சினிமா கலைஞர்களுக்கு நடக்கும் சங்கடங்களை முறையிடும் விதமாக முன்னாள் முதல்வர் கலைஞரிடம் தைரியமாக  எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவின்  ஜாம்பவான்களே அமைதியாக அமர்ந்திருந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் வெடித்து தள்ளி இருப்பார்.

இதற்காக இவர் சந்தித்த பிரச்சனைகளோ ஏராளம். இவ்வாறு தைரியமாக இருக்கும் அஜித் அவர்கள் நிஜ வாழ்க்கையில பெருந்தன்மை மிக்கவர். இந்திய சினிமாவில்  இவரைப் பற்றி அறிந்த நட்சத்திரங்கள் பலரும் கூறும் ஒரே  வாக்கியம்  “அஜித் இஸ் சோ ஸ்வீட்”.

Also Read:5 முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சனை.. இதுதான் அஜித்துக்கு மிகப்பெரிய பிளஸ் அண்ட் மைனஸ்

அஜித், தான் பழகும் அனைவரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பில்லா 2 படத்தில் ரகுமான் அவர்கள் வில்லனாக கமிட் ஆவதற்கு முன், கோ ஆர்டிஸ்ட் ஒருவர் ரகுமானிடம்  அஜித்தை பற்றி தவறாக அவதூறு பரப்பியிருந்தார்.

தலைக்கு  தலைக்கனம் அதிகம், கர்வம் பிடித்தவர் என பலவகையிலும் அஜித்தை பற்றி தரக்குறைவாக மற்ற நடிகர்களிடம் கூறி அவரின் வளர்ச்சியை தடை செய்வதில் குறிக்கோளாக இருந்தனர்.  ஒருவித தயக்கத்துடனே பில்லாவில் நடித்த ரகுமான், படப்பிடிப்பின் முடிவில் அஜித் ஒரு ஜென்டில்மேன், ஒரு கைண்ட் மேன் என அஜித்தின் பல மேனரிசங்களை புகழ்ந்து விட்டு சென்றார்.

Also Read:புது ட்ரெண்ட் செட்டை உருவாக்க துடிக்கும் அஜித்.. மூளைகாரனிடம் சரணடைந்த ஏகே

Trending News