வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

கோவிந்தா கோவிந்தா.. இன்னைக்கு அவ்வளவு தான்.. பேசாம பெட்டி படுக்கை எடுத்துட்டு ஊருக்கே போயிருக்கலாம்

சென்னை வாசிகளுக்கு அக்டோபர் மாதம் வந்தாலே, “பக்..பக் ” என்று தான் இருக்கும். ஏன் என்றால் மழை எப்போது வெளுத்து வாங்கும் என்றே தெரியாது. குறிப்பாக வேளச்சேரி பகுதிகளை பற்றி கேட்கவே வேண்டாம். ஏரியில் வீடை கட்டி வைத்துவிட்டு, மிதந்து கொண்டிருப்பார்கள்.

இந்த வருடம் அக்டோபர் மாதமே, மக்களை மழை ஓட ஓட விரட்டுகிறது. இதில் டிசம்பர் மாதம் எல்லாம் எப்படி இருக்கும்.. சென்னை என்ற மாவட்டம் இருக்குமா இருக்காதா என்றே தெரியவில்லை. இந்த நிலையில், நேற்றும் இன்றும் ரெட் அலெர்ட் அறிவிக்கபட்டிருந்தது. நம்ம ஊரில் காற்றடித்தாலே கரண்ட் போயிவிடும். இப்போது கேட்கவே வேண்டாம். இன்று முக்கியமான பல பகுதிகளில் பராமரிப்பு பனி காரணமாக மின் தடை ஏற்படும். இந்த மழையில் என்ன பராமரிப்பாக இருக்கும்?

எங்கே எல்லாம் மின்தடை ஏற்படும்?

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.

சென்னையை பொறுத்தவரையில், வியாசர்பாடி, நொளம்பூர், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மின்தடை ஏற்படும். மேலும், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனீ, விருதுநகர், தஞ்சாவூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை-லும் பல இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மழை இதில் கரண்ட் வேறு இல்லை. work from home கொடுத்துள்ளார்களா. மக்கள் பாவம் என்ன பாவம் பட போகிறார்களோ. ஆகமொத்தத்தில், இன்று கோவிந்தா தான்.

- Advertisement -spot_img

Trending News