வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எதிர்பார்ப்பை அசர வைக்கும் சிம்புவின் வெந்து தணிந்த காடு.. எவனும் தொட்டு பார்க்க முடியாத ரீ என்ட்ரி

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த சிம்பு தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.

சிம்ப, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Also Read : சிம்பு பட வாய்ப்பை தட்டி தூக்கிய RJ பாலாஜி.. புதுசு புதுசா பிரச்சினையை கிளப்புறாங்க!

இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது இப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகின்ற செப்டம்பர் 2ஆம் தேதி பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி செலவழிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Also Read : தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக் கொண்ட டி ஆர்-இன் புகைப்படம்.. தோள் கொடுக்கும் சிம்பு!

மாநாடு படத்தை தாண்டி மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்பதால் நான்கு பெரிய நடிகர்களை இப்படத்திற்கு பிரமோஷன் செய்ய படக்குழு அழைத்துள்ளது. மேலும் இவ்விழாவில் 6000 இருக்கைகள் ரசிகர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ பங்ஷன் போல சிம்பு படத்திற்கு இதுவரை ஏற்பாடு செய்தது இல்லை. முதல்முறையாக பிரமாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கண்டிப்பாக இப்படம் சிம்பு கேரியரில் திருப்புமுனையாக அமையும் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read : 30 கிலோ உடல் எடை குறைக்க கண்ணீர்விட்டு கதறிய சிம்பு.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்காரா.?

Trending News