வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குழந்தை பெறுவது பற்றி எடக்கு மடக்கா பேசிய ரைசா.. ஒரே கமெண்ட்டில் மானத்தை வாங்கிய ரசிகர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ரைசா வில்சன் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் வெற்றியடைந்து அவருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.

ஆனாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார். அனாவசிய கருத்துக்களை தேவையின்றி பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார். அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்தைப் பற்றி பேசி செம அடி வாங்கி வருகிறார்.

சமீபத்தில் ரைசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 5க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என ஒரு பதிவைப் போட்டார்.

raiza-tweet
raiza-tweet

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் போட்ட கமென்ட் தான் அல்டிமேட். ஆணுறை பற்றாக்குறை என்று கூறி ரைசாவின் எடக்கு மடக்கான கேள்விக்கு எக்குதப்பாக பதில் கொடுத்துள்ளார் அந்த ரசிகர்.

fan-comment-cinemapettai
fan-comment-cinemapettai

இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது கமெண்டுக்கு லைக்களைப் போட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பல ரசிகர்களும் தங்களுடைய வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இதுபற்றியெல்லாம் பிக் பாஸ் ரைசா கவலைப்பட மாட்டார் என்றே கூறுகின்றனர். அதற்கு காரணம் இப்படி யாராவது கூறினால் தான் தன்னுடைய டுவிட்டர் வைரலாகும் எனவும், அதன் மூலம் தன்னுடைய பெயர் வெளியில் தெரிந்தால் போதும் எனவும் நினைக்கிறாராம்.

Trending News