வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மேக்கப்பால் பொசுங்கிப் போன முகம்.. சரி செய்து, இப்ப தளதளனு வெளிவந்த ரய்சா வில்சன் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நபர் ஆனார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா வில்சன் அறிமுகமானார். பின்பு தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி 2, காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள the chase படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. சமீபகாலமாக ரைசா வில்சன் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

raiza wilson
raiza wilson

இவர் மாலதீவுக்கு போனதும் போதும் சொல்லவே தேவையில்லை அடுக்கடுக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சமீபத்தில் ரைசா வில்சன் முகம் அறுவைசிகிச்சை செய்ததால் முகம் வீங்கியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதற்கு மருத்துவர் ரைஸ் ஒரு டுபாக்கூர் பணத்திற்காக பொய் சொல்கிறார்களா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தற்போது ரைசா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் முகம் வீங்கியது கொஞ்சம் கூட தெரியாமல் தற்போது கொலுக்கு முழுக்கு என அழகாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Trending News