சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரத்தம் சொட்ட சொட்ட வெளியான ரைசாவின் ‘The chase’ டிரைலர்.. அட இது நம்ம மிஷ்கின் படத்தின் அட்ட காப்பியா.?

ரைசா வில்சன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் தெரியக்கூடிய நாயகியாக பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரைசா வில்சன்க்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. இவர் முதன்முதலாக கதாநாயகியாக நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு தற்போது ரைசா வில்சன் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘The chase’ எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரில்லர் கலந்த திகில் திரைப்படமாகும், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்று வருகிறது.

ட்ரைலரில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் மிஸ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் இடம் பெற்ற வசனங்களை காப்பியடித்து உள்ளது போன்று தெரிகிறது.

ஒருவேளை மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை தழுவிய கதையாக இப்படம் இயக்கிய உள்ளார்களா.? என்று தற்போது கேள்வியை ரசிகர்கள் சமுக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News