வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிங்கிள்ஸ் வாழ்க்கை போர்.. மிங்கிளாக தயாராகும் பிக் பாஸ் பிரபலம்!

தமிழில் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரைசா வில்சன். இவர் நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவாரோடு இணைந்து கலந்து கொண்ட நடிகர் ஹரிஸ் கல்யானுடன் இணைந்து ப்யார் ப்ரேமா காதல் படத்தில் நடித்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்திலும் ஹிட்டான ரைசா மேலும் சில படங்களுக்கும் ஒப்பந்தமாகி நடித்துக் கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 ல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட கைவசம் 6 படங்களுடன் பிசியாக இருக்கும் ரைசாவுக்கு கல்யாண ஆசை வந்து விட்டது போலும், பெண் வீட்டார் கேட்கவும் சட்டென சம்மதித்து விட்டாராம்.

இப்போது பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடும் பணியில் படுபிசி, யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ. ஏற்கனவே முகத்தை அழகு படுத்திக் கொள்கிறேன் என்று கூறி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

raiza wilson
raiza wilson

Trending News