வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

லிவிங் டு கெதரில் இருந்தீங்களா.? ரசிகர் கேட்ட கேள்விக்கு பளிச்சென பதிலளித்த ரைசா!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக மற்ற மொழி நடிகைகள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர் அப்படி தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றி நடிகையாக வந்து விடவேண்டும் என தொடர்ந்து போராடிக் கொண்டு வருபவர் தான் ரைசா வில்சன்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இவருக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் வராமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர் இடம் ஓரளவிற்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார்.

அதனால் தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் ரைசா வில்சன் தங்களது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்து வந்தனர். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுப் பெற்று கொடுத்தது.

அதன் பிறகு இந்த வெற்றியை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு ஒரு சில படங்களில் சொதப்பல்களால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். ஆனால் சமூக வலைதளங்கள் ஆக்டிவாக இருந்து தனது ரகசியங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்.

தற்போது ரைசா வில்சன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் பலரும் தங்களது கேள்விகளை கேட்டனர். அதற்கு சலிக்காமல் ஒவ்வொரும் கேள்விக்கும் பதில் அளித்து வந்தார். அப்படி ரசிகர் ஒருவர் நீங்கள் காதல் மற்றும் லிவிங் ரிலேஷன்ஷிப் லிருந்து உள்ளீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ரைசா வில்சன் நான் காதலித்து உள்ளேன் பல வருடங்கள் ரிலேஷன்ஷிப்லிருந்து உள்ளேன். ஆனால் 2016 ஆம் ஆண்டு விலகி விட்டதாக கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் யார் அந்த நபர் எனவும், எதனால் விட்டு விலகிநீர்கள் எனவும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

raiza wilson
raiza wilson

Trending News