தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமானவர் ராஜ் கபூர். அதன்பிறகு இவர் அஜித் மற்றும் சத்யராஜ்யை வைத்து படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளன.
தாலாட்டு கேட்குதம்மா: தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் தான் பிரபலமானார் ராஜ்கபூர். பிரபு, கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ராஜ்குமார் வாழ்க்கையில் முக்கியமான படமாகும்.
சத்தியவான்: முரளி மற்றும் கௌதமி நடிப்பில் உருவான திரைப்படம் சத்தியவான். இப்படத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவுக்கரசி மற்றும் சுந்தர்ராஜன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மாபெரும் வெற்றி பெறாமல் ஓரளவிற்கு மட்டுமே ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
அவள் வருவாளா: அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் வருவாளா. இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையிலும் சரி, ராஜ்கபூர் திரை வாழ்க்கையிலும் சரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது அவள் வருவாளா. இன்றும் இப்படத்திற்கான ரசிகர்கள் இருந்து தான் வருகிறார்கள்.
சமஸ்தானம்: சரத்குமார் மற்றும் சுரேஷ்கோபி நடிப்பில் உருவான திரைப்படம் சமஸ்தானம். மேலும் தேவயானி,அபிராமி நடித்துள்ளனர். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ராஜ் கபூருக்கு வெற்றி தராவிட்டாலும் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்று அன்றைய காலகட்டத்தில் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.
ஆனந்த பூங்காற்றே: அஜித்குமார் மற்றும் மீனா நடிப்பில் உருவான திரைப்படம் ஆனந்த பூங்காற்றே. இப்படத்தில் கார்த்திக், மாளவிகா, வடிவேல் மற்றும் விஜயகுமார் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று ராஜ் கபூர் மற்றும் அஜித்தின் திரை வாழ்க்கையில் முக்கியமானப் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இவர் சின்ன பசங்க நாங்க, குஸ்தி, வம்பு சண்டை, சின்ன ஜமீன், சீமான்,சுதந்திரம் மற்றும் ராமச்சந்திரன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.