ஷில்பா ஷெட்டி பாலிவுட் திரைத்துறையில் நடிப்பவர். இவர் பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் மாடல் ஆவார். இதுவரை ஷில்பா ஷெட்டி அனைத்து மொழி திரைப்படங்களையும் சேர்த்து 40 திரைப்படங்களில் இறங்கி விட்டார்.
இவருடைய சகோதரியும் பாலிவுட் நடிகை, 1991 ஆம் ஆண்டு லிம்கா விளம்பரத்தில் அவர் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பின் 1993 ஆம் ஆண்டு பஸிகர் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் அவார்ட் சிறந்த துணை நடிகை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
ஷில்பா ஷெட்டி 2007ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் கிரிக்கெட் அணியின் பங்குதாரராகவும் மேலும் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். மேலும் ராஜ்குந்த்ரா சொந்தமாக ஒரு செயலியை உருவாக்கி அதன் மூலம் தற்போது பிரச்சனையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை மலாடு என்ற இடத்தில் சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் ரெய்டு ஒன்றை நடத்தினர். அதில் ஆபாச படம் எடுத்துக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை விசாரித்த போது தான் ராஜ்குந்த்ராவிற்கும் இதில் சம்பந்தம் உள்ளது என்பது அம்பலமானது நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலையும் பெண்களை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உள்ளார். அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்து அதை தனது சொந்தமான செயலி மூலம் பதிவேற்றம் செய்து அதைப் பார்க்க லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணையில் உண்மை தெரிந்து போலீசார் ராஜ்குந்த்ரா கைது செய்துள்ளனர். அந்த செயலியையும் மற்றும் அவர் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க உள்ளனர். மேலும் மூன்று பெண்கள் தங்களிடம் கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க கூறியதாக புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
