வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்ன எல்லாரும் கழுவி ஊத்துறாங்க.! வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் ரிப்போர்ட்

சிலருக்கு நாக்கில் சனி என்று சொல்லுவார்கள். தற்போது ஜோதிகா அப்படி தான். தேவையில்லாமல், மூக்கை நுழைத்து தற்போது மூக்குடை பட்டு வருகிறார். பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்து பேசி இருக்கலாம். கங்குவா படம் குறித்து, படக்குழு குறித்தும் படத்தின் விமர்சனங்கள் குறித்தும், நடிகையும் கங்குவா படத்தின் நாயகனான சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய பதிவு கங்குவா படத்தினை மீண்டும் ட்ரோல் செய்யக் காரணமாக மாறிவிட்டது.

ஏற்கனவே ரசிகர்கள், படத்துக்கு இப்படி ப்ரோமோஷன் தேடிக்கொள்கிறீர்களா என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சூர்யா அடுத்து பாலிவுட் படத்தில் வேறு நடிக்கிறார். அந்த தைரியத்தில் தான் இங்கு உள்ள ரசிகர்களை வசைபாடுகிறீர்களா என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் ரிப்போர்ட்

ஜோதிகா வெளியிட்ட அறிக்கையில், இரட்டை அர்த்த பாடல்களை எல்லாம் கொண்டாடுகிறீர்கள். ஆனால் இந்த படத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. ஆம். periodic காட்சிகள் வரும்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் திஷா பதானி வரும் கட்சிகளுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

தற்போது, ராஜ்மோகன் ரிப்போர்ட், “நம்பவே முடியாத ஆக்‌ஷன் காட்சிகள் மற்றப் படங்களில் இருப்பதாக ஜோதிகா சுட்டிக் காட்டுகின்றார். விமானத்தில் ஃபுட்போர்டு அடிக்கும்படியான க்ளைமேக்ஸினை 2024ஆம் ஆண்டு யாருங்க எடுப்பா? என்று கேட்டுள்ளீர்கள்”

“நடுத்தர ரசிகர்கள்கூட இதுபோன்ற காட்சிகள் ஹாலிவுட் படத்தில் வந்தால் நம்பமாட்டார்கள். காரணம் காலம் மாறிவிட்டது? மக்களின் ரசனை மாறிவிட்டது. படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை எனக் கூறுகின்றார்கள். அவ்வளவுதான்.

மக்களின் ரசனைக்கு ஏற்றவகையில் படம் எடுக்கவேண்டுமே தவிர, மக்களை குறை சொல்லிக் கொண்டு இருக்ககூடாது என பேசியுள்ளார். இதெல்லாம் நமக்கு தேவையா.. உண்மையாக நல்ல படங்களை ஆதரிப்பவர், ஓடாத நல்ல படங்கள் அனைத்திற்கும் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்.

Trending News