வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

‘ராஜா’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் .. என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா !

1998 ஆம் ஆண்டு இறுதியில் பெங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியவர்தான் நடிகை பிரியங்கா திரிவேதி. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அத்தனை மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் இவர். வசீகரமான அழகு , வெகுளித்தனமான நடிப்பு என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இந்த நடிகை.

மற்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர், 2002 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த திலீப்பிற்கு காதலியாக இவர் நடித்திருப்பார். ஒரு படம் நடிப்பதற்குள்ளையே இவருக்கு தமிழில் மிகப் பெரிய ஹீரோ உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Also Read:14 வயதில் அஜித்துக்கு ஜோடியான நடிகை.. பள்ளி மாணவியை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர்

நடிகர் அஜித்குமார், ஜோதிகா, வடிவேலு, மதன் பாப், நளினி நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சியில் வரும் இவர் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித் மற்றும் பிரியங்கா ஜோடியும் திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

ராஜா திரைப்படத்தை தொடர்ந்து பிரியங்காவுக்கு சீயான் விக்ரம் உடன் இணைந்து காதல் சடுகுடு என்னும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இறுதியாக நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஜனனம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

Also Read:அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.. புது வில்லன் அவதாரத்தில் போட்ட அஸ்திவாரம்

தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் சினிமா வாய்ப்புகள் குறைந்து விடவே இவர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார். பிரியங்கா திரிவேதியை திருமணம் செய்திருப்பது நடிகர் உபேந்திரா தான். இவருடைய படம் கப்சா சமீபத்தில் அட்டர் பிளாப் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா திரிவேதி தற்போதைய புகைப்படம்

பிரியங்கா திரிவேதி

40 வயதை கடந்த பிரியங்கா உபேந்திரா தற்போது கன்னட சினிமாவிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆயுஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய குடும்ப புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

Also Read:ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Trending News