வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அல்ட்ரா மாடர்னாக மாறிய வேலைக்காரி மயிலு.. விட்டா ஆல்யாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல

விஜய் டிவியில் ஆல்யா மானசா மற்றும் சித்து நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி2. இந்த சீரியலில் சில குறிப்பிட்ட நபர்களை தவிர அதிக புதுமுகங்கள் நடித்து வருகின்றனர்.

அதில் சரவணன் குடும்பத்தில் வேலை செய்யும் மயிலு கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை நவ்யா சுஜி.  இந்த சீரியலில் இவர் தன்னுடைய துள்ளலான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவ்யாவுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

தெலுங்கு பெண்ணான நவ்யா சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்தவர். இவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோமே என்று பலருக்கு குழப்பம் இருக்கலாம். மாடலிங்கில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நவ்யா ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் 2 வில் நவ்யா நடித்துள்ளார். அதில் நடிகை ரித்திகா சிங் போன்று பாக்ஸராக வந்து சிவாவை கட்டிப் பிடிப்பது போல் நடித்து இருப்பார். அந்த படத்தில் இந்த சீனில் நடித்த நவ்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு மாடலிங் செய்து வந்த அவருக்கு ராஜா ராணி 2-வில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அல்ட்ரா மாடர்ன் பெண்ணான நவ்யா இந்த சீரியலில் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணியில் நடித்து வருகிறார்.

இருப்பினும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் என்று பதிவிட்டு வருகிறார். அவருடைய இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

raja-rani-myluu
raja-rani-myluu

ராஜா ராணி முதல் பாகத்தில் வேலைக்காரப் பெண்ணாக நடித்த ஆலியா மானசா தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேபோல் ராஜா ராணி2 வில் நடிக்கும் நவ்யாவும் விரைவில் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

navyasuji
navyasuji

Trending News