விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் சமையல் கலைஞராக இருக்கும் கதாநாயகன் சரவணன் சென்னைக்கு சமையல் போட்டிக்காக பல தடைகளைத் தாண்டி அதனுடைய மனைவி சந்தியா உடன் வந்துள்ளார்.
இங்கு சந்தியா மற்றும் சரவணன் இடையே நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது. இவர்களுடன் நேற்றைய நிகழ்ச்சி சீரியலின் வில்லியான அர்ச்சனா தன்னுடைய கணவனை மயக்குவதற்காக மாடல் புடையில் மஜாவாக களமிறங்கியுள்ளார்.
இவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ராஜா ராணி2 சீரியலே களைகட்டியது. அத்துடன் இந்த இரண்டு இளம் ஜோடிகளை மிஞ்சும் அளவுக்கு சந்தியாவின் மாமனார் மாமியார் அடிக்கும் லூட்டியும் மற்றொருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏனென்றால் சந்தியாவின் மாமனார் நேற்று தன்னுடைய மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்து தலையில் வைத்துவிட்டு தனியாக ஒரு காதல் டிராக் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
எனவே சில தினங்களுக்கு முன்பு ஆடி மாதம் என்பதால் சந்தியா, அர்ச்சனாவை கவனமாக இருக்கச் சொன்ன மாமியார், தற்போது ஆடி மாதம் முடிந்துவிட்டதால் இளசுகளுடன் சேர்ந்து ரொமான்ஸ் விட ஆரம்பித்து விட்டார்.
இதனால் ராஜா ராணி சீரியல் ரசிகர்களும் தற்போது மூன்று ஜோடிகளின் காதல் காட்சியை குதூகலமாக கண்டு களிக்கின்றனர்.