புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வெண்பாவை தொடர்ந்து சீரியலின் போக்கை மாற்றிய ஆலியா.. ராஜா ராணி-2 அடுத்த ட்விஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களிடையே விஜய் டிவி சீரியல் என்றாலே தனி மவுசு. ஏனென்றால் வெவ்வேறு கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரஸ்யத்தை அள்ளித் தருவதில் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளே இல்லை.

எனவே தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா சீரியலின் இயக்குனருக்கு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக ஆலியா மானசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசா வரும் நாட்களில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக ரவுண்டு கட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென்று ஆலியா கர்ப்பம் தரித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதை சீரியலின் இயக்குனர் பிரவீன் பெனாட் சகஜமாக எடுத்துக் கொண்டார். ஏனென்றால் ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலில் இயக்கிய பிரவீன் பெனாட்டுக்கு சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ஃபாரினா இதைப்போன்ற இக்கட்டான சூழ்நிலையை கொடுத்தார்.

ஆனால் பிரவீன்பெனாட், ஃபாரினாவின் நிலைமையை புரிந்து கொண்டு கதையை அதற்கேற்றார்போல் மாற்றிவிட்டார். தற்போது அதேபோன்று நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசாவிற்காக ஏற்ப ராஜா ராணி2 சீரியலின் கதையை மாற்றி அமைக்க உள்ளார்.

அத்துடன் ஆலியா மானசா தான் சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ராஜா ராணி2 சீரியலில் சந்தியா-சரவணன் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் தூக்கலாக காண்பிக்க படுவதால் சீரியலிலும் சந்தியா கர்ப்பமாக அதிக வாய்ப்பிருக்கிறது.

Trending News