வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே ஒரு முத்தக் காட்சியால் சோலி முடிந்த இயக்குனர்.. கதை இல்லாமல் பரிதவிக்கும் ராஜா ராணி-2 சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் கதைக்களம் ஹிந்தியில் ‘என் கணவன் என் தோழன்’ என்ற தலைப்பில் வெளிவந்தாலும், ராஜா ராணி2 சீரியலில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா சின்னத்திரை ரசிகர்களிடையே தனக்கென இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ராஜா ராணி2 சீரியலில் சமையல் போட்டிக்கு கலந்து கொள்ள சரவணன், அவருடன் சந்தியா மற்றும் சரவணன் அப்பா, அம்மா செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதால் பாஸ்போர்ட் எடுப்பதற்காக போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளனர். அப்போது குடும்பமாக இருக்கும் சரவணனை பார்க்க சந்தியாவிற்கு தன்னுடைய இறந்த அம்மா அப்பாவின் நினைவு வந்து அழத் தொடங்கி விட்டார்.

அதன்பிறகு சந்தியாவின் மாமனார் மாமியார் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். பின்பு சரவணன் மனைவி சந்தியாவை காதல் பேச்சால் உருக வைத்தார். அப்போது இருவருக்கும் ரொமன்ஸ் பத்திக்கிச்சு.

அப்போது ராஜா ராணி2 சீரியலில் ஒரே ஒரு முத்தக் காட்சியை சீரியல் இயக்குனர் காண்பித்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அத்துடன் இந்த சீரியலில் நாளுக்கு நாள் கதாநாயகி கதாநாயகன் அவர்களுக்கிடையே நெருக்கம் தூக்கலாக உள்ளது.

raja-rani2-serial-cinemapettai
raja-rani2-serial-cinemapettai

ஏற்கனவே சுட்ட கதை என்பதால், இதுபோன்று ரசிகர்களுக்கு பிடித்தமான காதல் காட்சிகள் தொடர்ந்து எபிசோடில் வைத்து டாப் கியரில் ராஜா ராணி2 சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

Trending News