வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பச்சை துரோகம், உனக்கு கூச்சமே இல்ல.. அர்ச்சனாவை கிழித்து தொங்கவிட்ட கணவன்

ஆலியா மானசா மற்றும் சித்து இணைந்து நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே நமக்கு தெரிந்த கதையாக இருந்தாலும் அதை பல சுவாரசியங்களுடன் விறுவிறுப்பு கலந்து இயக்குனர் கொடுத்து வருகிறார்.

தற்போது இந்த கதையில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது சரவணன் சென்னையில் நடந்த சமையல் போட்டியில் ஜெயித்து 5 லட்சம் பரிசுத் தொகையை பெறுகிறார். இதை பிடிக்காத சரவணனின் தம்பி மனைவி அர்ச்சனா அந்த பணத்தை ஆட்டையைப் போட நினைக்கிறார்.

இதனால் ஜவுளி கடை வைத்திருக்கும் அர்ச்சனா தன் கடையில் இரண்டு புடவை வாங்கினால் சரவணன் கடையில் இருக்கும் இரண்டு கிலோ ஸ்வீட் இலவசமாக தரப்படும் என்று விளம்பரம் செய்கிறார். இதனால் சரவணனுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

இருந்தும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அர்ச்சனாவை ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குக் கிடைத்த பரிசு பணத்தில் அர்ச்சனாவுக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றனர். அவர்களில் நல்ல மனதை புரிந்து கொண்ட அர்ச்சனாவின் கணவன் தன் மனைவிக்கு அறிவுரை கூறுகிறார்.

அவர் தன் மனைவியிடம் நாம் இவ்வளவு பெரிய துரோகம் செய்தும் சரவணன் அதை பெரிதுபடுத்தாமல் இருந்து விட்டார். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் நம் நிலைமையே வேறு. இனி இதுபோன்ற தப்பு செய்யாதே என்று மனைவிக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால் அதை கேட்காத அர்ச்சனா வழக்கம் போல தன் கணவனிடம் சண்டை போடுகிறார்.

இன்று ராஜா ராணியில் இது குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் சரவணன் மற்றும் சந்தியா எவ்வளவு நல்லது செய்தாலும் அவர்களை மட்டம் தட்டி அதன் மூலம் சந்தோஷப்படுகிறார் அர்ச்சனா. அவரின் சதித் திட்டங்களில் இருந்து சந்தியா, சரவணனை எவ்வாறு காப்பாற்றுவார் என்பது போன்ற கதை தான் வரும் வாரங்களில் இந்த சீரியலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending News