வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கருவை கலைக்க போய் சிக்கலில் மாட்ட போகும் அர்ச்சனா.. ராஜா ராணி-2 அடுத்த ட்விஸ்ட்!

ஆல்யா மானசா, சித்து நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் இன்றைக்கு ஒளிபரப்பாக உள்ள காட்சிகள் பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர இருக்கிறது.

சரவணன் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அர்ச்சனா கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அர்ச்சனா எப்படியாவது அந்த கருவை கலைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதனால் தன் கணவரிடம் இரண்டு நாட்கள் வெளியில் ஜாலியாக தங்கி விட்டு வரலாம் என்று பொய் சொல்கிறார். அதற்கு சம்மதிக்கும் அர்ச்சனாவின் கணவன் தன் வீட்டினரிடம் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டு அர்ச்சனாவுடன் கிளம்புகிறார்.

அப்படி கிளம்பும் இருவரும் ஒரு லாட்ஜில் தங்குவதற்காக செல்கின்றனர். ஆனால் அந்த இடம் குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் கிடையாது. இரண்டு நாட்கள் அங்கு தங்க வரும் அவர்கள் இருவரையும் ஹோட்டல் மேனேஜர் உட்பட அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

இதை அறியாத அர்ச்சனா கரு கலைக்கும் விஷயத்தை எப்படி கணவனிடம் சொல்வது என்று புலம்பியபடி நிற்கிறார். இது சம்பந்தமான காட்சிகள் தான் ராஜா ராணி 2 சீரியலில் அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது. இனி வரும் காட்சிகளில் இவர்கள் இருவரும் போலீசில் மாட்டிக் கொள்வது போன்று காட்டப்படும்.

அவர்களை கதாநாயகி சந்தியா தன் போலீஸ் மூளையை உபயோகப்படுத்தி காப்பாற்றுவார். மேலும் அர்ச்சனாவின் வில்லத்தனங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும். இது போன்ற சுவாரசியமான காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சீரியல் விறுவிறுப்பாக சென்றாலும் ஒரு சிலர் சீரியல் மிகவும் போராக சென்று கொண்டிருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Trending News