வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரவுடிகளை ரவுண்ட் கட்டிய சந்தியா.. போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டும் ஆலியா மானசா!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான டப்பிங் சீரியல் ‘என் கணவன் என் தோழன்’ இந்த சீரியல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் இதனை தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்து எடுக்கப்பட்ட சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2.

ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் நடித்த கதாநாயகி ஆலியா மானசா இதிலும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் சித்தூ கதாநாயகனாக நடிக்கிறார். தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீ ரியலில் பல அதிரடி சம்பவங்கள் நிகழ உள்ளது.அதில் சமையல் போட்டிக்காக சரவணனை சென்னை அழைத்து செல்கிறார் சந்தியா.

இதற்கான நெக்ஸ்ட் எபிசோட் ப்ரோமோ வெளியாகி மக்களின் ஆர்வத்தை மென்மேலும் தூண்டியுள்ளது. இதில் சந்தியாவும் சரவணனும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கார் சின்னப்பையன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்று விடுகிறது. அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்க்கும்படி சரவணனிடம் சொல்லிவிட்டு சந்தியா விபத்தை ஏற்படுத்திய காரை பின் தொடர்கிறார்.

பட்டைய கிளப்பும் ஆலியா மானசா

alya-manasa-raja-rani-2-update
alya-manasa-raja-rani-2-update

அந்தக் காரை பின்தொடர்ந்து அந்தக் கார் சென்ற வீட்டிற்கு சந்தியாவும் செல்கிறார். அங்கே சில ரவுடிகள் சந்தியாவை கண்டு தாக்க முற்படுகின்றன. ஏற்கனவே தான் இருக்கும் இடத்தை சரவணனுக்கு நேக்காக தெரிவித்துவிட்டார் சந்தியா. எனவே அங்கு வந்த சரவணன் ரவுடிகளை வெளுத்துக் கட்டி சந்தியாவை காப்பாற்றினார்.

இதுபற்றிய தகவலை சந்தியா போலீஸிடம் சொல்ல, சாமர்த்தியமாக செயல்பட்ட சந்தியாவை காவல்துறை அதிகாரி பாராட்டி காவல்துறையில் சேர அழைப்பு விடுக்கிறார்.

இனி சந்தியா எடுக்கப்போகும் முடிவும், அதற்கு குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு எப்படி இருக்கும் என்றும் பொறுத்திருந்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Trending News