வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதிதி – ஊரே பேசும்போது கூட அவமானமா தெரியல.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய ராஜலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராஜலட்சுமி. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். இந்நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்தில் இவர் பாடிய பாடலை தூக்கிவிட்டு அதிதியை பாட வைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் விருமன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அதிதி சங்கர் பாடியுள்ள மதுரை வீரன் என்ற பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கிறது.

ஆனால் இந்த பாடலை முதலில் ராஜலட்சுமி தான் பாடியிருக்கிறார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அதிதியின் குரலில் அந்த பாடல் வெளியானது அதனால் தற்போது ராஜலட்சுமிக்கு ஆதரவாக பலரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதிதி வேண்டுமென்றே ராஜலட்சுமியின் வாய்ப்பைத் தட்டி பறித்து விட்டதாகவும், தன் அப்பா பேரை அவர் பயன்படுத்தி இவ்வாறு செய்ததாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு ராஜலட்சுமி தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது அந்தப் பாடலை அதிதி நன்றாக பாடியிருக்கிறார் என்றும், யாரும் எனக்காக அவரை திட்ட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அந்தப் பாடலை நான் முதலில் பாடியது உண்மைதான். ஆனால் ஒரு பாடலுக்கு எந்த குரல் பொருத்தமாக இருக்கும் என்பது இசையமைப்பாளருக்கு நன்றாக தெரியும். ஒருவேளை அதிதியின் குரல் அந்த பாடலுக்கு நன்றாக பொருந்தி இருக்கலாம். அதனால் இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம். எனக்கு படக்குழு மீது எந்த கோபமும் கிடையாது என்று பெருந்தன்மையாக பேசியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் எனக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது. என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கும் என்று யுவன்சங்கர் ராஜாவுக்கு நான் பதிவு செய்து விட்டேன். அதுவே எனக்கு போதும் என்று பெருந்தன்மையுடன் பேசுவது போல் சிறிதாக குத்தி காட்டியும் பேசியிருக்கிறார்.

ஏனென்றால் இதற்கு முன்பு கூட ராஜலட்சுமியின் கணவர் செந்தில் பிகில் படத்தில் வரும் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் என்ற பாடலை பாடியிருந்தார் ஆனால் இறுதி நேரத்தில் அந்த பாடலை தளபதியே பாடிவிட்டார். இப்படி திரையுலகில் கணவன், மனைவி இருவருக்கும் ஏகப்பட்ட அவமானங்கள் நடந்திருக்கிறது.

தற்போது ராஜலட்சுமியின் இந்த பதில் அதிதி சங்கரை மிகவும் அப்செட் ஆக்கியிருக்கிறதாம். ஏனென்றால் சங்கர் மகள் என்ற அடையாளம் தான் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் என்று பலரும் பேசி வருகின்றனர். இதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ராஜலட்சுமி தன் ஆதங்கத்தை வெளிப்படையாக கூறாமல் அதிதிக்கு வக்காலத்து வாங்குவது போல பேசி இருப்பது அவருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

Trending News