வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராஜமவுலி இயக்கும் அடுத்த படம்.. சூப்பர் ஸ்டார் கூறிய பதில்

ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இப்படத்தில் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதுமே பிரபலமான இயக்குனர் ஒருவர் படத்தை எடுத்து முடித்து விட்டால் அவரது அடுத்த படத்தின் மீதான கவனம் அனைவரும் பக்கம் திரும்பும். அப்படித்தான் தற்போது ராஜமௌலி அடுத்ததாக யாருடன் இணையபோகிறார் எந்த நடிகர் நடிக்கப்போகிறார் என பலரும் ராஜமௌலியிடம் கேட்டு வந்தனர்.

maheshbabu-rajamouli-cinemapettai
maheshbabu-rajamouli-cinemapettai

ஆனால் சமீபத்தில் மகேஷ் பாபு பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பல்வேறு விதமான கேள்விகள் கேட்க அதற்கும் பலவிதமான பதில்களைக் கூறினார். அப்படித்தான் ராஜமவுலி படத்தில் நீங்கள் நடிப்பது உண்மையா என கேட்டனர். அதற்கு மகேஷ் பாபு ஆமாம் அடுத்ததாக ராஜமவுலி படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் இப்படத்தில் ஒரு இந்திய நடிக்க இருப்பதாகவும் ஒரு பெரிய கதாபாத்திரத்தை தனக்குப் ராஜமவுலி தைரியமாக கொடுத்திருப்பதாகவும் கூறினார். படம் வெளியானால் ராஜமவுலிக்கும் தனக்கும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என தெரிவித்திருந்தார்

Trending News