பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதிகாரபூர்வமாக அறிவித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவித்த போஸ்டர் தான் பிரச்சனையே. 400 கோடி செலவு செய்து ஒரு சொந்தம் போஸ்டர் கூட ரெடி செய்ய முடியாதா என நெட்டிசன்கள் ராஜமௌலியை கிண்டல் செய்து வருகின்றனர்.
ராஜமௌலி இயக்கத்தில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR). கிட்டதட்ட 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தாறுமாறாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் போஸ்டர் 2007ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான கோஸ்ட் ரைடர் படத்தின் போஸ்டருடன் ஒப்பீட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் இந்த செய்தி தான் தற்போது இந்திய சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பாகுபலி படங்களின் பல காட்சிகள் காப்பியடித்து எடுக்கப்பட்டதுதான் என புகைப்படங்களுடன் நெட்டிசன்கள் பதிவு செய்தனர். ஆனால் அது படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் RRR படம் வெளிவரும் முன்னரே இந்த மாதிரி காப்பிகளில் சிக்குவது படக்குழுவினரை சங்கடப்படுத்தி உள்ளதாம்.
மேலும் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரைப்படங்களில் RRR திரைப்படமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி வரும் போஸ்டர்களில் மிக கவனமாக இருக்கவேண்டும் என படக்குழு போஸ்டர் டிசைனர்களுக்கு கடுமையாக எச்சரித்துள்ளாதாம்.