சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராஜமவுலி படத்தில் வில்லனாக தமிழ் முன்னணி நடிகர்.. இவருக்கு பைத்தியம் புடிச்சிருக்கா என்ன?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திடீர்னு என்ன ஆச்சு என்கிற அளவுக்கு இருக்கிறது அவரது நடவடிக்கைகள்.

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் ரத்தம் ரணம் ரவுத்திரம் என்ற படம் ரெடியாகி வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இணைந்துள்ளதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரும் முக்கிய நடிகருமான சீயான் விக்ரம் இடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். ஹீரோவாக கேரியர் நன்றாக சென்று கொண்டு இருக்கும் போது எதற்கு தேவையில்லாமல் விக்ரமுக்கு இந்த வேலை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விக்ரம் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இருந்தாலும் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் மகான், கோப்ரா போன்ற படங்கள் நிச்சயம் அவருக்கு மீண்டும் மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்த நேரத்தில் அவர் வில்லனாக நடிக்க முடிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

Trending News