வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பொன்னியின் செல்வனை விட 5 மடங்கு பட்ஜெட்.. மிரள வைக்கும் ராஜமௌலியின் கனவு படம்

தமிழில் எப்படி இயக்குனர் சங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறோமோ அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ராஜமெளலி தான். இவரது படங்கள் அந்த அளவிற்கு தரமாக இருக்கும். உதாரணமாக இவரின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படத்தை கூறலாம்.

அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் அளவிற்கு இவரின் படைப்பாற்றல் இருந்தது. நடிகர்களின் தேர்வும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது என்று பலர் பாகுபலி படத்தை பாராட்டினார்கள். அவ்வளவு ஏன் உலக சினிமாவே பாகுபலி படத்தை ஆச்சரியத்தோடு பார்த்தது.

அப்படிப்பட்ட பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். ராம்சரண் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது.

இந்நிலையில் ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமெளலி சமீபத்தில் நடந்த ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அடுத்ததாக மகாபாரதத்தை படமாக இயக்க போவதாக கூறியிருந்தார். தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மகாபாரத கதையை படமாக எடுக்க ராஜமெளலி சுமார் இரண்டாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் தொகையை பட்ஜெட்டாக நிர்ணயம் செய்துள்ளாராம். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பட்ஜெட் 500 கோடி தான் அதை விட இது ஐந்து மடங்கு. மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் பாகுபலி படத்தைவிட பல மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் மட்டும் அதிகம் அல்ல. படத்தின் நாட்களும் அதிகம் தான். நடிகர்கள் யாரும் 10 ஆண்டுகளுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். எனவே இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இருப்பினும் பட வேலைகள் தொடங்கினால் தான் மற்ற விவரங்கள் தெரியவரும்.

Trending News