வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

45 நொடிக்கு படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக வாங்கிய ராஜமௌலி.. விளம்பரத்திற்காக கொட்டிக் கொடுத்த முதலாளி

Director Rajamouli: சரித்திரம் பேசக்கூடிய தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அதுவும் அவர் விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். அதிலும் அந்த விளம்பரத்தில் சில நொடிகள் மட்டுமே தோன்றுவதற்கு இத்தனை கோடியை சம்பளமாக வாங்கி இருப்பது பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

இயக்குனர் ராஜமௌலி தற்பொழுது ஓப்போ(OPPO) மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவ்வளவு பிஸியான நேரத்தில் இவர் எப்படி இந்த விளம்பரத்தில் நடித்தார், அதற்கு எப்படி ஒப்புக் கொண்டார் என கேள்விகள் வந்தன. இந்த விளம்பரம் வெறும் 45 நொடி மட்டுமே வருகிறது.

Also Read: பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

இதற்கு ராஜமௌலி வாங்கிய சம்பளம் 30 கோடி. இதுவரை இந்தியாவில் உள்ள பெரிய நடிகருக்கு கூட இவ்வளவு சம்பளம் கொடுத்தது இல்லை. ஆனால் இவருக்கு அந்த மொபைல் கம்பெனி நிறுவன முதலாளி கோடிகளை வாரி இறைத்திருக்கிறார்.

அதனால்தான் இவ்வளவு பிஸியான நேரத்திலும் இந்த பெரிய தொகைக்காக அவர் இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ‘பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்’, ‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்ற பழமொழியை எல்லாம் சும்மா சொல்லவில்லை.

Also Read: பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்.. மினிமம் பட்ஜெட்டில் சங்கர், ராஜமவுலிக்கு சவுக்கடி கொடுக்க வரும் யாத்திசை

நிஜமாகவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் கிடைக்கிற எல்லா வேலைகளையும் செய்து காசு பார்ப்பார்கள். அப்படித்தான் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கக்கூடிய ராஜமௌலியும் விளம்பரத்தில் நடித்தால் 30 கோடி கிடைக்கும் என்றதும் அதை தயங்காமல் செய்துவிட்டார்.

அதுமட்டுமல்ல இயக்குனரான ராஜமௌலி ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற.பிரம்மாண்ட படங்களை கொடுத்து 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இந்த விளம்பரத்தில் நடித்து ஒரு விளம்பரத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும், அதற்கும் சேர்த்து தான் 30 கோடி வாங்கியுள்ளார் ராஜமௌலி.

Also Read: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

Trending News