தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவர் ராஜமௌலி படத்தை பிடித்து எப்படியாவது இழந்த தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை மீட்டு எடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.
ராஜமௌலியின் படங்களுக்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் அவருடைய பாகுபலி படங்கள் பேசப்பட்டது. அதுவரை பிரம்மாண்டம் என்றால் சங்கர்தான் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் இனி ராஜமௌலிதான் பிரம்மாண்டம் என பேச வைத்துவிட்டார்.
அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளார். இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் அந்த படத்தில் தமிழ் முன்னணி நடிகர் சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
அப்படி மகேஷ்பாபு படத்தில் வாய்ப்பு இல்லை என்றாலும் ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகி விட வேண்டும் என்பதற்காக இப்போதே தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் அக்கட தேசத்திற்கு அனுப்பி வைத்து வேவு பார்த்துக் கொண்டிருக்கிறாராம் சூர்யா.
அந்தப்படம் மட்டும் ஓகே ஆகி விட்டால் தெலுங்கு சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்ற கணக்கில் உள்ளாராம் சூர்யா. கடந்த சில வருடங்களாக சூர்யாவின் தெலுங்கு மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதும் கூடுதல் தகவல்.