வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2வது முறையாக ராஜமௌலியுடன் கூட்டணி போடும் பிரபல நடிகர்.. எந்த தயாரிப்பாளர் மாட்டப் போறாரோ?

ராஜமௌலி படம் எடுக்கப் போகிறார் என்று தெரிந்தாலே பல தயாரிப்பாளர்களுக்கு கழுத்துகிட்ட கத்தி இருக்கிற மாதிரிதான். எந்த நேரத்தில் என்ன ஆகும் என்பதே தெரியாது.

ராஜமௌலி இயக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள். ஒருவேளை சொதப்பினால் மொத்தமும் இழந்து நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஆகிவிடும்.

அந்தளவுக்கு பல கோடிகளில் படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள RRR படம் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்பதையும் அறிவித்து விட்டனர்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு மீண்டும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் பட நடிகரான பிரபாஸுடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளாராம். ஆனால் இந்த படம் வரலாற்று கதை இல்லை என கூறுகின்றனர். ஏற்கனவே பிரபாஸ் ராஜமௌலி கூட்டணியில் பாகுபலி படங்கள் வெளியானது.

அதற்கு மாறாக பக்கா மாஸ் கமர்சியல் படமாக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனராக ராஜமௌலி வலம் வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதன் காரணமாகவே பிரபாஸ் மற்றும் ராஜமௌலி இணையும் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பும் வசூலும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

rajamouli-prabhas-cinemapettai
rajamouli-prabhas-cinemapettai

Trending News