புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ராஜமௌலி.. இந்தப் பாராட்டு அஜித்துக்கு மட்டும்தான்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமவுலி கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது உள்ள ஹீரோக்களை பற்றி ராஜமவுலி பேசி உள்ளார். அதாவது சில ஆண்டுகளாக ஹீரோக்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி தங்களது வயதை மறைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.

Also Read : அடுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

அந்த வகையில் நடிகர் அஜித் எப்போதுமே வெள்ளை முடியோடு தான் நடித்து வருகிறார். இதை சினிமாவில் ஒரு நல்ல போக்காக நான் பார்க்கிறேன் என்று ராஜமவுலி கூறியுள்ளார். அதேபோல் தான் விஜய் சேதுபதியும் எப்படி இருக்கிறாரோ அதேபோல் படத்தில் காட்சி அளிக்கிறார்.

இப்போது ராஜமவுலி அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது விஜய்யை மறைமுகமாக அஜித் தாக்கியுள்ளார் என்றும் சிலர் கிளப்பி விட்டுள்ளனர். ஏனென்றால் விஜய் தற்போது விக் வைத்து படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : ராஜமவுலி கிட்ட நெருங்க கூட முடியாத சங்கர்.. இன்று வரை இருக்கும் பெரிய ஏக்கம்

அதுமட்டுமின்றி வெளியில் வரும் போதும் சாதாரணமாக வராமல் வீக் வைத்து வருவதால் தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள அவர் முற்படுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதுவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் விக் வைத்து நடத்தாலும் வெளியில் செல்லும்போது இயல்பாகத்தான் செல்வார்.

ஆனால் விஜய் அப்படி சென்றால் தனது மார்க்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று சிலர் கூறி வருகிறார்கள். விஜயின் தற்போதைய புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் விஜய்யை மறைமுகமாக தாக்கி அஜித்தை ராஜமவுலி புகழ்ந்து பேசி உள்ளார் என்றும் கூறி வருகிறார்கள்.

Also Read : கெட்டப் சேஞ்ச் பண்ணாத விஜய்.. ஒரே மாதிரி நடிக்க இதுதான் காரணம்

Trending News