புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கௌதம் மேனனின் தோல்வி படத்தை சரிகட்ட சிறுத்தை சிவா படத்தில் நடித்த அஜித்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!

தயாரிப்பாளர், எழுத்தாளர் நடிகர் இயக்குனர் என் பன்முகத்தன்மை கொண்டவர் திரு.ராஜன். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி உட்பட பல்வேறு நடிகர்களையும் படத்திற்காக வீணாக பணம் செலவிடும் தயாரிப்பாளர்கள் குறித்தும் காராசாரமாக பேசியிருந்தார்.

தல தளபதி உட்பட பல்வேறு உச்ச நடிகர்களையும் சகஜகமாக விமர்சித்துள்ளார். அத்தனை எளிதாக பேசும் அளவிற்கு அவரின் அனுபவம் இருப்பதனை எவராலும் மறுத்துவிட முடியாது. பெரும் நிறுவனங்கள் எங்கோ இருந்து பணத்தை புரட்டிக்கொண்டு வந்து இங்கு இருக்கும் சிறு குறு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பலியிடுவதாகவும்.

லைகா போன்ற நிறுவனங்களும் நஷ்டத்தில் தான் இருக்கின்றன என்றும் பல தொழில்களில் இருப்பதால் சினிமாவில் வரும் நஷ்டத்தை ஈடுகட்ட முடிந்தது. இப்போது இவ்வளவு செலவுகளுக்கு இடையில் இனி சாத்தியப்படாது என்றும் கூறினார்.

k rajan
k rajan

மேலும் என்னை அறிந்தால் படத்தில் தோல்விக்காக தான் தல அஜித் ஏ.எம்.ரத்னத்திற்கு வேதாளம் படம் தயாரிக்க வாய்ப்பளித்தார் என்றும் கௌதம் மேனனால் போன பணத்தை சிவாவை வைத்து ரத்தினத்திற்கு மீட்டு தந்தார் தல என்றும் கூறினார்.

இப்படியாக தமிழ் சினிமாவின் ரசிகர்கள் புதுப்புது நாயகன் நாயகிகளை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் எனவே புதியஇயக்கம் புதிய நாயகர்களை வைத்து எடுப்பதில் தான் கொள்ளை லாபம் என்றும் கூறினார்.

25 படங்கள் வரை வெளியாகும் பெரிய நடிகர்கள் படத்தில் வெற்றி காண்பது என்னவோ 5 முதல் 6 படங்கள் தான் என்றும் வெற்றி என்பது ரசிகர்கள் மட்டும் தீர்மாணிப்பதல்ல 150 கோடி வரை செலவு செய்த படத்தில் 120 கோடிகளை வருமானமாய் பெறுவதில் பலனில்லை என்றும் கூறினார். கோச்சடையான் லிங்கா உட்பட எத்தனையோ தோல்விகளுக்கு பதிலேதும் சொல்லாமலே நகர்ந்துவிட்டார் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.

Trending News