கடந்த ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பகிரங்கமான மாபெரும் வெற்றி கண்ட படம் மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தியேட்டர்களில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரனா ஊரடங்கு காரணமாய் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் குறிப்பிட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வந்த தருணம் அது மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க கோரி விஜய் உட்பட படக்குழுவில் சிலர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டதற்காக படத்தை தியேட்டரில் வெளியிட சம்மதித்தார்கள்.
முதலில் 100 % பார்வையாளர்களுடன் அனுமதி பெறப்பட்ட படம் ரிலீசுக்கு ஒரு நாளுக்கு முன்பு 50% மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி தந்தது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாசிட்டிவ் கமாண்டுகளை பெற்று படம் வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது.
சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் கூறுகையில் கைதி படத்தின் இயக்குனர் நல்ல அருமையாக திட்டமிடலுடன் படங்களை கையாள்கிறார் என்று கூறி பிறகு மாஸ்டர் படமும் நல்ல படம் தான் அதில் எனக்கு பிடிக்காதஒரே விடயம் ஒரு கல்லூரி ஆசிரியராகா இருக்கும் விஜய் குடித்துவிட்டு வருவது போன்ற காட்சிகள் தான் என்றார்.
மாணவர்களுக்கு எல்லாம் பிடித்த ஆசிரியர் மாணவர்களுக்கு நல்வழிகை கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார். படத்தில் எந்த குறைகளும் இல்லை எனக்கு தோன்றியதை நான் கூறினேன் காரணம் நான் 18ஆண்டுகள் வரை ஆசிரியராக பனியாற்றிவன் என்றும் கூறினார்.