சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாண்டியன் குடும்பத்திற்காக அப்பாவிடம் மல்லுக்கெட்ட போகும் ராஜி.. கதிரை கொண்டாட போகும் மாமனார்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், கதிரும் செந்திலும் ராஜியின் அண்ணன் குமரவேலுவை அடிப்பதற்காக வெறியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சரவணன் அவர்களை சமாதானப்படுத்தி குமரவேலுவை பார்த்தால் என்னிடம் சொல்ல வேண்டும் என்று கூறி கிளம்பி விட்டார்.

அதன் பின் சரவணன் போகும் போது எதேர்ச்சியாக குமரவேலுவை பார்த்து விட்டார். அப்பொழுது சரவணன் ஆத்திரத்தில் ராஜியின் அண்ணனை அடித்து உதைத்து விட்டார். பிறகு அங்கிருந்த மாமா கதிருக்கும் செந்திலுக்கும் போன் பண்ணி தகவலை சொல்கிறார். உடனே அவர்களும் வந்து ராஜியின் அண்ணனை அடிக்கிறார்கள்.

கிரிமினல் ஆக யோசித்த ராஜியின் அப்பா

அடுத்து கோமதியின் கடைசி தம்பி, கதிர், செந்தில் மற்றும் சரவணனை தடுத்து அனுப்பி விடுகிறார். பிறகு அடி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் குமரவேலுவை பார்த்த அப்பா கோபத்துடன் பாண்டியன் குடும்பத்துடன் சண்டை போட போகிறார். அதற்கு ராஜியின் அப்பா கொஞ்சம் பொறுமையாக இரு. இப்பொழுது பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கு பொண்ணு பார்த்து இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்கள் கோர்ட்டு ஜெயில் என்று அலைந்து திரிந்தால் கல்யாணம் நின்றுவிடும். அதுதான் பாண்டியனுக்கு விழப்போகும் மரண அடியாக இருக்கும் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்து விடுகிறார்கள். அதன்படி சரவணன், கதிர் மற்றும் செந்திலை போலீசார் அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு கூட்டிட்டு போகிறார்கள்.

இதனை பார்த்த கோமதியின் கடைசி தம்பி வீட்டிற்கு வந்து பாண்டியனிடம் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி விசாரிக்கிறார். ஆனால் போலீஸ் எதனாலும் நீங்கள் கோர்ட்டில் பேசிக்கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுகிறார். இதைக் கேள்விப்பட்ட பிறகு ராஜி தன் வாக்கப்பட்ட குடும்பத்திற்காக அப்பாவிடம் உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

அப்படி மட்டும் ராஜி அப்பாவுக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்துவிட்டால் கதிரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது மட்டுமில்லாமல் பாண்டியன் குடும்பத்துக்கு பெரிய கும்பிடு போட்டு உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடைசிவரை ராஜியின் சித்தப்பா மற்றும் அண்ணன் மட்டும் பிடிவாதமாக மல்லுக்கட்ட போகிறார்கள்.

Trending News