வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பாண்டியனிடம் டியூஷன் எடுப்பதற்கு சம்மதத்தை வாங்கப் போகும் ராஜி.. சப்போர்ட் பண்ணும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தனக்குத் தேவையான செலவை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் ராஜிக்கு டியூஷன் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் டியூஷன் எடுப்பதற்கு பாண்டியன் சம்மதம் கொடுக்காமல் முரண்டு பிடிக்கிறார். இதனால் கோமதியை விட்டு பேச வைக்கலாம் என்று அவ்வப்போது கோமதியை தூண்டிவிட்டு பாண்டியனிடம் பேச சொல்கிறார்.

ஆனால் கோமதி, பாண்டியனிடம் பேச பயந்து போய் டியூஷன் பிரச்சனையை இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ராஜி, இன்றைக்கு கண்டிப்பாக பேசி எனக்கு சம்மதத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கோமதியை வற்புறுத்தி பாண்டியனிடம் பேச அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் எப்படி பேச என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் கோமதிக்கு மீனா காதில் ஹெட்செட் மாட்டிவிட்டு நான் சொல்றபடி பேசுங்க என்று அனுப்பி வைக்கிறார்.

அதன்படி கோமதி காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பேசப்போகிறார். ஆனால் தடுமாற்றம் அடைந்ததால் சரியாக சொல்ல முடியாமல் திரும்பி போய் விடுகிறார். இதனால் ஆத்திரப்பட்ட ராஜி, இனி யாரையும் நம்பி இருந்தால் பிரயோஜனம் இல்லை. அதனால் நானே களத்தில் இறங்குகிறேன் என்று பாண்டியனிடம் பெர்மிஷன் வாங்குவதற்கு போய்விட்டார்.

அதன்படி ராஜி, பாண்டியனிடம் நான் படித்துக் கொண்டே டியூஷன் எடுக்கிறேன் மாமா எனக்கு அது ரொம்ப பிடித்திருக்கிறது. நானும் அவர்களிடம் டியூஷன் மறுபடியும் எடுக்க வருவேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறேன். இதில் எங்க அப்பா அம்மா என்ன சொல்லுவாங்க என்னுடைய குடும்பம் பிரச்சினை பண்ணுவாங்க என்று யோசித்து என்னை தர்ம சங்கடத்தில் சிக்க வைத்து விடாதீர்கள்.

எனக்கான சின்ன சின்ன தேவைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு டியூஷன் தவிர எனக்கு வேறு வழி இல்லை. தயவு செய்து என்னுடைய ஆசையை பண்ணுவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த சமயத்தில் அனைவரும் சேர்ந்து ராஜிக்கு சப்போர்ட்டாக பேசுவார்கள். ஆனால் இதில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கப் போகிறது.

அதாவது தங்கமயில் தான் ஆரம்பத்தில் இருந்து ராஜி டியூஷன் எடுக்க கூடாது என்று சில தில்லாலங்கடி வேலைகளை பார்த்தார். அந்த வகையில் இப்பொழுது ராஜி டியூஷன் எடுக்க வேண்டும் என்பதற்காக சப்போர்ட் பண்ணி பாண்டியனிடம் பேசப் போகிறார். தங்கமயில் பேசியதும் பாண்டியனும் டியூஷன் எடுப்பதற்கு ராஜிக்கு சம்மதத்தை கொடுத்து விடுவார்.

Trending News