Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் மீனாவை அவருடைய குடும்பத்துடன் பழையபடி சேர்த்து வைக்க வேண்டும். அதற்கு மீனாவின் அப்பா கோபத்தை குறைக்க வேண்டும் என்றால் நான் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் மாப்பிள்ளை ஆக மாற வேண்டும் என்று கதிரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அதுவரை இந்த விஷயத்தை மீனா மற்றும் வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்டிருக்கிறார்.
அதே மாதிரி கதிரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாளும் நான் கார் டிரைவராக போகப் போகிறேன். இந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்லக்கூடாது மீனா அண்ணியிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதனை தொடர்ந்து மீனா ஆபீஸ் வேலையை கொஞ்சம் வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது செந்தில் அங்கே வருகிறார்.
மைண்ட் வாய்ஸ்ல உண்மை உளறிய மருமகள்
அப்பொழுது மீனாவிற்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கிறார். அதற்கு மீனா நான் ஆபீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதில் நீ என்ன உதவி பண்ண முடியும் என்று சொல்கிறார். உடனே செந்தில், நீ வேலை பார்க்கும் பொழுது நான் உன் கை காலை பிடித்து விட்டால் உனக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று பாசத்தை காட்டி பேசுகிறார்.
அப்பொழுது கதிர், ராஜிக்காக பார்ட் டைம் வேலை பார்த்து வருகிறான். தற்போது இது போதாது என்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கார் டிரைவராக வேலைக்கு போகப் போகிறான் என்று மீனாவிடம் சொல்லிவிட்டார். உடனே மீனா, இப்படி வேலை பார்த்தால் உடம்பு என்ன ஆகும், படிப்பில் நல்ல கவனம் செலுத்த வேண்டும் இதெல்லாம் நீங்க சொல்ல மாட்டீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் ஆனால் கதிர் எதையும் காது கொடுத்து கேட்க மாட்டிருக்கிறான் என்று செந்தில் சொல்கிறார். பிறகு நான் சொன்ன இந்த விஷயத்தை நீ ராஜிடம் சொல்லிடாதே. அப்புறம் வீட்டிற்கு தெரிந்து விட்டால் பிரச்சினையாகும் என்று செந்தில், மீனாவிடம் சொல்கிறார். அதன்படி மீனா நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இன்னொரு பக்கம் கதிர், ரூமில் உட்கார்ந்து தானாக சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த ராஜி என்னாச்சு ஏன் தனியாக சிரிக்கிறாய் என்று கேட்ட நிலையில், ஒருத்தருக்கு காதல் வந்துவிட்டால் அவரை எந்த அளவிற்கு மாற்றும் என்று நான் செந்தில் அண்ணன் மூலம் பார்க்கிறேன் என்று கூறுகிறார். அப்பொழுது ஏன் என்னாச்சு என்று ராஜி கேட்ட நிலையில், மீனா அண்ணியின் குடும்பம் அண்ணனே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதனால் மாமனார் ஆசைப்பட்டபடி ஒரு கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணியாச்சு என்றால் கவர்மெண்ட் வேலை கிடைத்து விடும். அப்பொழுது மருமகனாக ஏற்றுக் கொள்வார் மீனாக்கும் சந்தோசமாக இருக்கும் என்று செந்தில் அண்ணன் படிச்சு எக்ஸாம் எழுத போகிறார். இதை நினைத்து பார்த்தேன் சிரிப்பு வருகிறது என்று சொல்கிறார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் நீயும் அண்ணியிடம் சொல்லாதே என்று ராஜிடம் கூறிவிட்டார்.
இதனை அடுத்து மறுநாள் ராஜி மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது எதார்த்தமாக மீனா, கதிர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கார் டிரைவர் ஆக வேலைக்கு போகப் போகிறார் என்பதை உளறிவிட்டார். அதே மாதிரி ராஜியும், உங்களுக்காக செந்தில் மாமா கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு போகப் போகிறார் என்பதையும் உளறி விட்டார்.
இப்படி மாத்தி மாத்தி உண்மையை உளறிய ராஜி மீனா, தங்கமயிலே ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு சம்பவத்தை செய்து விட்டார்கள். பிறகு மீனா, செந்திலிடம் ஆசையாக போய் கட்டிப்பிடித்து எனக்காக நீ இவ்வளவு யோசித்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.
உனக்கு யார் சொன்னார் என்று கேட்கும் பொழுது ராஜி சொன்னால் என்று மீனா கூறுகிறார். அப்பொழுது கதிர் வேலைக்கு போற விஷயத்தை சொல்லல எல்லாம் என்று செந்தில் கேட்கும் பொழுது மீனா நான் எதையும் சொல்லவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார்.
அதே மாதிரி ராஜி, கதிரிடம் வேலைக்கு போவதை பற்றி கேட்டு அக்கறையாக விசாரிக்கிறார். அப்பொழுது மீனா அண்ணி தான் இதை சொன்னார்கள் என்று சொல்லிய நிலையில், செந்தில் அண்ணா வேலைக்கு போகப்போகிறது நீ சொல்லல என்று கேட்கிறார்.
உடனே ராஜி அதை எல்லாம் நான் சொல்லவில்லை என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனால் செந்தில், மீனா, ராஜி மற்றும் கதிர் அனைவருமே எல்லா உண்மையும் உளறி விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- ஆசை மருமகளுக்காக ஓகே சொன்ன பாண்டியன்
- அண்ணனுக்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கும் கதிர்
- பாண்டியனின் ஆணவத்திற்கு முடிவு கட்ட போகும் செந்தில்