வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பொண்டாட்டிக்காக பாண்டியனை அடக்கிய மகன்.. தங்கமயிலை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராஜி, மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்க வேண்டும் என்று ராஜி நினைத்தார். அந்த வகையில் ராஜியின் ஆசைப்படி மீனா உதவி பண்ணும் வகையில் டியூஷன் எடுப்பதற்கு தெரிந்த வீட்டில் பேசி வைத்திருந்தார். இது விஷயமாக மாமாவிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கி தர வேண்டும் என்று கோமதி இடம் கூறியிருந்தார்கள்.

அதன்படி கோமதியும், மாமாவின் மனநிலை போர்த்து நான் இதைப் பேசி சம்மதம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இதை கெடுத்து பிரச்சனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தங்கமயில், பாண்டியனிடம் ராஜி வீட்டில் போய் டியூஷன் எடுக்கப் போகிறார். அதற்கு மீனா உதவி செய்திருக்கிறார் என்பதை போட்டுக் கொடுத்து விடுகிறார்.

இதைக் கேள்விப்பட்டதும் பாண்டியன் வீட்டிற்கு வந்து ஏதோ எல்லாரும் சேர்ந்து கொலைக் குற்றம் பண்ணுன மாதிரி நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அனைவரையும் காயப்படுத்தி விட்டார். போதாதருக்கு மீனாவையும் நீ வந்த பிறகு தான் இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் என் பேச்சைக் கேட்காமல் அவங்க இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள் என்று திட்டி விடுகிறார்.

தங்கமயிலை தட்டி வைத்த ராஜி

இவ்வளவு திட்டு வாங்கிய மீனா அழுது கொண்டே ரூமில் போய் நினைச்சு நினைச்சு வேதனைப்படுகிறார். இவரை சமாதானப்படுத்தின செந்தில் இடம் மனக்குறையை கொட்டி ஆதங்கப்படுத்திக் கொள்கிறார். பிறகு மீனாவை சமாதானப்படுத்தி விட்டு செந்தில் கடைக்கு போகிறார். இன்னொரு பக்கம் ராஜி தனியாக அழுது கொண்டிருக்கிறார். ராஜியை சமாதானப்படுத்த கதிர் முயற்சி எடுக்கிறார்.

உடனே ராஜி அழுது கொண்டிருக்கும் பொழுது கதிர், ராஜியின் கையை பிடித்து எங்க அப்பா எப்போதும் இப்படித்தான் எல்லாத்தையும் திட்டிக்கிட்டே இருப்பார். ஆனால் இதை பெருசாக எடுத்து மனச போட்டு குழப்பிக்காத. நீ நல்லா படிச்சு வேலைக்கு போக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காக என்னால் முடிந்த உதவிகளை நான் பண்ணுகிறேன்.

ஆனால் படிப்பது மட்டும்தான் உன்னுடைய நோக்கமாக இருக்கணும், எனக்கு வேலைக்கு போய் சம்பாதிப்பது எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் நீ எனக்கு உதவி பண்ண வேண்டும் என்பதற்காக இப்படி ஏதாவது செய்து அப்பாவிடம் திட்டு வாங்காத. நான் உன்னை படிக்க வைத்து நல்ல பார்த்துக் கொள்வேன் என்று ஆறுதல் படுத்தி தன் மனைவியின் துக்கத்தை போக்கும் அளவிற்கு கதிர், ராஜியிடம் நெருங்கி விட்டார்.

தற்போது இவர்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டே வருகிறார்கள். போகப் போக இவர்கள் தான் மனம் ஒத்தும் தம்பதிகள் என்று சொல்லும் அளவிற்கு காதலை பரிமாறப் போகிறார்கள். இதனை தொடர்ந்து இதற்கெல்லாம் காரணம் இந்த தங்கமயில் தான் என்று ராஜி மீனாவிற்கு தெரிந்து விட்டது.

உடனே தங்கமயிலை சந்தித்து, உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள். எங்க விஷயத்தில் தலையிட வேண்டாம். எங்களுக்கு தெரியும், நான் டியூஷன் எடுக்க போகிறது நீங்கள் தான் மாமாவிடம் சொல்லி இருப்பீர்கள் என்று. இனி இந்த வெளியே நிப்பாட்டிட்டு உங்க புருஷன் உங்க மாமா உங்க வாழ்க்கை என்று மட்டும் இருந்தால் உங்களுக்கு நல்லது என்று ராஜி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.

அடுத்ததாக செந்தில், கடையில் இருக்கும் பாண்டியனிடம் மீனாவை எதுக்கெடுத்தாலும் குறை சொல்வதையும் திட்டுவதையும் நிப்பாட்டுங்க. மீனா மீது எந்த தப்பும் இல்லை என்று பொண்டாட்டிக்காக அப்பாவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இப்படி செந்தில் கிட்ட கேள்வியால் பாண்டியன் கொஞ்சம் யோசித்து நிலையில் வீட்டுக்கு போய் மருமகளை சமாதானப்படுத்தும் விதமாக மீனா ராஜியிடம் அப்பா சென்டிமென்ட் வைத்து பேசி ஆறுதல் படுத்துகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News