Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குமூலம் கொடுத்த பெண் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதன்படி கதிர் பற்றி நல்ல விஷயங்கள் டிவியில் வர ஆரம்பித்துவிட்டது. இதை பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.
உடனே ராஜி, வெளியே வந்து அவருடைய குடும்பத்தின் வாசலில் முன் நின்று அப்பத்தாவை கூப்பிடுகிறார். உள்ளே இருக்கும் அப்பத்தா, சித்தி மற்றும் அம்மா ஏன் ராஜி வாசலில் இருந்து கத்திக் கொண்டிருக்கிறார் என்று யோசிக்கிறார்கள். பிறகு வெளியே நின்ற ராஜி டிவியை போட்டு பாருங்க என்று சொல்கிறார். ஆனால் ஏன் எதற்கு என்று தெரியாமல் ராஜி சித்தி வெளியே வந்து கேட்ட நிலையில் சக்திவேல் மற்றும் குமரவேலு வந்து விடுகிறார்கள்.
அப்பொழுது ராஜி, கதிர் மீது எந்த தவறு இல்லை என்று தற்போது டிவியில் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் என்னவெல்லாம் பேசி கதிரை கஷ்டப்படுத்தி என்னையும் கடத்திட்டு போனதாக நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினீங்களா? இப்ப போய் டிவியை பாருங்க என்று சொல்லிய நிலையில் வீட்டிற்குள் போன அப்பத்தா, சித்தி மற்றும் அம்மா அனைவரும் செய்தியை பார்க்கிறார்கள்.
அதில் கதிர் அந்த பெண்ணை காப்பாற்ற விஷயங்களை பெருமையாக பேசிய பொழுது அனைவரும் ஆனந்த கண்ணீர் விட்டு சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். பிறகு சக்திவேல் மறுபடியும் ராஜிடம் வந்து சண்டை போடும் பொழுது ராஜி இனிமேல் தேவையில்லாமல் கதிரிடமும் என் குடும்பத்திடமும் பேசி பிரச்சினையை பண்ணினீங்க என்றால் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கதிரின் கவுரவத்தை காப்பாற்ற சித்தப்பா என்று கூட பார்க்காமல் சக்திவேலின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு சவால் விட்டுவிட்டார்.
இதையெல்லாம் பார்த்த பழனிச்சாமி, ராஜி உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று நல்லாவே தெரிந்து விட்டது என சொல்லி காதலித்த விஷயங்களை பற்றி கேட்கிறார். ஆனால் கதிரிடம் சொல்வதற்கு ஒன்னும் இல்லாததால் நீங்கள் மறுபடியும் இதே பற்றி கேட்டுக் கொண்டே இருந்தீர்கள் என்றால் நான் கீழேயே போய் தூங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே சரி நான் எதுவும் கேட்கலை நாங்களே கண்டுபிடித்துக் கொள்கிறோம் என்று சொல்லி மொட்ட மாடியில் அண்ணன் தம்பிகள் சேர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு கதிரை நினைத்து கவலைப்பட்டுக்கொண்ட பாண்டியன் மொட்டை மாடிக்கு வந்து கதிரை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு போய்விடுகிறார். பாண்டியன் போனதும் கதிர், அப்பாவின் பாசத்தை நினைத்து பெருமிதம் பட்டுக் கொள்கிறார்.
அடுத்து கீழே தூங்கிக் கொண்டிருந்த கோமதியை எழுப்பி, இனி கதிர் எந்த வேலைக்கும் போக வேண்டாம். வேலைக்கு போனால்தான் தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுகிறான். நீ நாளைக்கு சொல்லிவிடு எந்த வேலைக்கு போகக்கூடாது காலேஜ்ல போய் படிக்க மட்டும் சொல் என பாண்டியன் அக்கறையாக பேசி விட்டார்.
அடுத்ததாக கதிரை பார்ப்பதற்காக குழலி மட்டன் குழம்பு கொண்டு வந்து பாசத்தை காட்டுகிறார். அந்த நேரத்தில் தங்கமயிலின் அம்மா மற்றும் அப்பாவும் வந்து விடுகிறார்கள். உடனே எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிய நிலையில் தங்கமயில் அம்மா , நாட்டுக்கோழி குழம்பு கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் குழலி அதை எல்லாம் அப்புறம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று உதாசீனப்படுத்தி பேசிவிடுகிறார். இதனை பார்த்த தங்கமயில் முகம் வாடிப்போய் பரிதாபமாக நிற்கிறார்.
இதனை தொடர்ந்து கதிர் மற்றும் ராஜியின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர்களுக்கு தெரியாமல் மனசுக்குள் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அந்த காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இரண்டு பேரும் மனசுக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இவர்களுடைய காதல் மலர ஆரம்பித்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் அது அப்பட்டமாக வெளிவந்து விடும்.