சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கதிரிடம் அன்பு காட்டி அரவணைக்கும் ராஜி.. சக்திவேலின் வாயை அடக்க சொத்தில் பங்கு கேட்ட கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்று நிரூபித்துக் காட்டும் விதமாக செந்தில் மற்றும் சரவணன், காணாமல் போன அந்த பெண்ணை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து நடந்து உண்மையை கூறிவிட்டார்கள். அதனால் கதிர் மீது எது தப்பும் இல்லை என்று போலீஸ் விட்டதால் பாண்டியன், கதிரை அழைத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

வந்ததும் வாய்க்கு வந்தபடி பேசிய மச்சான்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேரடியாக சக்திவேல் மற்றும் முத்துவேலிடம் என் மகன் மீது எந்த தப்பும் இல்லை என்று எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்க என்னமோ எங்களுக்கு இதுதான் வேலை என் பையன் இந்த வேலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வாய்க்கு வந்தபடி நாக்கில் நரம்பில்லாமல் பேசி என்னெல்லாம் அட்டூழியம் பண்ணினீங்க.

பார்த்தீங்களா எந்தவித லாயரும் ஜாமீனும் இல்லாமல் தப்பே இல்லை என்று என் பையன் வெளியே வந்து விட்டான் என்று சொல்லி அனைவரது மூஞ்சிலும் கரியை பூசி விட்டு வீட்டிற்கு கூட்டிட்டு போய்விட்டார். போனதும் கோமதி பையனுக்கு திருஷ்டி சுத்தி போட்டு வெளியே தூரப்பட வருகிறார். கூடவே செந்திலும் வந்த நிலையில் எதிர்க்கே நின்ற சக்திவேல் மறுபடியும் வம்பு இழுக்கும் விதமாக பேசினார்.

ஆனால் கோமதி விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்தது மட்டுமில்லாமல் நான் உன் தங்கச்சி என்று நினைக்க போய் தான் ஒதுங்கி போய் இருக்கிறேன். இல்லையென்றால் அந்த சொத்து அனைத்திலும் எனக்கும் பங்கு இருக்கு என்று சொல்ல தெரியும். அந்த சொத்துக்களையும் வாங்கவும் தெரியும் என்று சொல்லிய நிலையில் சக்திவேல் பயந்து போய் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.

ஏனென்றால் சக்திவேலை பொறுத்தவரை எல்லா சொத்துக்களையும் தான் மட்டும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முத்துவேலுவை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். அதனால் கோமதி சொன்னபடி சொத்தில் பங்கு கேட்டு விடுவாளோ என்ற பயம் வந்துவிட்டது, அதனால் வாயை மூடிக்கொண்டார். பிறகு கதிர் எனக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கிறது நான் போய் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி ரூமுக்குள் போய்விடுகிறார்.

அப்பொழுது கோமதி, செந்தில் மற்றும் சரவணனை ரெஸ்ட் எடுங்க என்று சொல்லும்போது பாண்டியன் கடை வேலையை யார் பார்ப்பார். நேற்று கடை லீவு போட்டாச்சு, இப்பவாவது போய் திறக்க வேண்டும் என்று செந்திலை போக சொல்கிறார். அதற்கு மீனா இன்னைக்கு ஒரு நாள் கடையில் லீவு போட்டு எல்லாரும் வீட்டில் இருந்தால் கதிருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் மீனாவை முறைத்து பார்க்கிறார்.

தற்போது கதிர் அடிபட்டு காயத்துடன் இருப்பதால் ராஜி மொத்த அன்பையும் கொட்டி பாசத்தை காட்டும் விதமாக அரவணைத்து காதலை வெளிப்படுத்த போகிறார்.

Trending News