வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாண்டியன் குடும்பத்திடம் சிக்கிய ராஜி.. அரசியை ரூட் விட பின்னாடியே போகும் குமரவேலு, கண்டித்த அண்ணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி மற்றும் குழலி இருவரும் சேர்ந்து பேங்குக்கு போய் நகைகளை எடுத்துட்டு வரலாம் என்று போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் போனதிலிருந்து தங்கமயில் பயத்துடன் பதட்டமாகவே இருக்கிறார். காரணம் குழலி நம்முடைய நகை போலி நகை என்று கண்டுபிடித்து விடுவாரோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் அம்மாவுக்கு போன் பண்ணியும் புலம்பி பேசிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா பார்த்ததும் போனை கட் பண்ணி விட்டு என்ன பயமாக இருக்கிறது என்று கேட்கிறார். அத்தையும், குழலி அண்ணியும் பேங்குக்கு போயிருக்காங்க பத்திரமா நகைகளை எடுத்துட்டு வந்து விட வேண்டும் அதுதான் பயமாக இருக்கிறது என்று சொன்னேன் என சமாளித்து விடுகிறார்.

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க ஆட்டோவில் தான் வருவாங்க பயப்பட தேவையில்லை என்று மீனா சொல்கிறார். அடுத்ததாக ராஜி, கண்ணனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று ரூமுக்குள் இருந்து புலம்புகிறார். அப்பொழுது அங்கே வந்த கதிர் அதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு நாமும் தேடி பார்ப்போம் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார்.

அந்த சமயத்தில் மீனாவும் டக்குனு உள்ள வந்து விடுகிறார். உடனே மீனா, நான் ராஜி மட்டும்தான் இருப்பாள் என்று நினைத்து உள்ளே வந்து விட்டேன் சாரி என்று சொல்கிறார். அதற்கு கதிர் பரவாயில்லை உள்ளே வாங்க என்று சொல்லி கூப்பிடுகிறார். பிறகு ராஜியிடம் நான் வரும்பொழுது யாரையோ கண்டுபிடித்து விடனும் என்று சொன்னியே என்ன விஷயம் என கேட்கிறார்.

அதற்கு ராஜி, கதிரை பார்த்து நடந்து விஷயத்தை சொல்லவா என்று சைகை மூலம் கேட்கிறார். அதற்கு கதிரும் சம்மதம் கொடுத்துவிட்டு போய்விடுகிறார். உடனே கண்ணனை பார்த்த விஷயத்தையும் அவனை துரத்திட்டு போன விஷயத்தையும் ராஜி சொல்கிறார். அடுத்ததாக மீனா, கண்டுபிடித்து விடலாம் கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போகிறார்கள்.

அங்கே தங்கமயில் டென்ஷனாக இருப்பதை பார்த்து இந்த அக்காக்கு என்ன ஆச்சு நகை என்று சொல்லும் பொழுது பதட்டமாகிறார்கள் என்று மீனா, ராஜிடம் சொல்கிறார். அதற்கு ராஜியும் ஆமா நானும் கவனித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லிய நிலையில் தங்கமயில் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்ததாக நகை எடுத்துட்டு வீட்டிற்கு வந்த கோமதி மற்றும் குழலிடம் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தங்கமயில் தப்பித்து விடுகிறார்.

அடுத்ததாக பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் பொழுது பேப்பரை படித்த பாண்டியன், ராஜி திருடனை பிடிப்பதற்காக ஓடிப்போன விஷயம் பேப்பரில் வந்திருப்பதை கேட்கிறார். ஆனால் அதற்கு எதையாவது சொல்லி சமாளிக்கணும் என்று கதிர் மற்றும் ராஜி பொய் சொல்லி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவரிடம் சிக்காமல் சமாளித்து விடுகிறார்கள்.

இதற்கு இடையில் அரசி, காலேஜுக்கு போயிட்டு வரும் பொழுது குமரவேலு அரசியை பார்த்து பேசுவதற்கு பின்னாடியே போகிறார். பிறகு என்ன படிக்கிறாய் எங்கு படிக்கிறாய் என்று ஒவ்வொரு கேள்வியா கேட்டு அரசி கூடவே வருகிறார். அந்த வகையில் அப்பா சொன்னபடி அரசியை எப்படியாவது ரூட்டு விட்டு கல்யாணம் பண்ணனும் என்று நல்லவர் மாதிரி வேஷம் போட தயாராகி விட்டார்.

ஆனால் அந்த சமயத்தில் செந்தில் வந்து பார்த்து விடுகிறார். அப்பொழுது குமரவேலுவை திட்டி, என் தங்கச்சி பின்னாடி உனக்கு என்ன வேலை என்று கண்டித்து அனுப்பி விடுகிறார். அத்துடன் அரசிடமும் இனி காலேஜுக்கு தனியாக போகக்கூடாது. எங்களை யாராவது கூட்டிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அந்த வகையில் சக்திவேல் சொன்னபடி குமரவேலு நல்லவன் மாதிரி வேஷம் போட்டு அரசியை கவுத்து விடுவார் போல.

Trending News