புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விரட்டி அடிக்கப்படும் ராஜி.. பாண்டியன் குடும்பத்தையே சீர்குலைக்கும் மருமகள்

Pandian Stores 2 Today Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி, என்ன தான் தப்பு செய்தாலும் அவர் எப்போதுமே தப்புதான் செய்வார் என்ற அர்த்தம் இல்லை. காதலனால் ஏமாற்றப்பட்ட ராஜி, இப்போது கணவராலும் அடிக்காத குறையை விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் தன்னுடைய மகன் கதிரிடம் எடுத்த பணம், நகையை திருப்பிக் கொடுக்கும்படி சொல்கிறார்.

கதிர் தேவையில்லாமல் குற்றவாளியாக மாறி இருக்கிறார் என ராஜி நடந்து உண்மையை எல்லாம் பாண்டியனிடம் சொல்லத் துணிகிறார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி, கதிரே தன் மீது எல்லா பழியையும் போட்டுக் கொள்கிறார். அமைதியாகவும் அழகாகவும் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இப்போது ராஜியால் நிலைகுலைந்து போய் இருக்கிறது.

இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று ராஜி கதிரிடம், ‘நடந்த உண்மையை எல்லாம் நான் சொல்லி விடுகிறேன். நான்தான் பணம் நகையை எடுத்து தொலைத்து விட்டேன் என்று சொல்லி எல்லா பிரச்சினையையும் சரி செய்யவா?’ என்று கேட்கிறார். உடனே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதிர், ராஜியிடம், ‘ஏற்கனவே நீ செஞ்சதெல்லாம் போதும். அதுவே ஏழு ஜென்மத்திற்கு தாங்கும்.

Also Read: குணசேகரன் முகத்தில் கரியை பூசும் தர்ஷன், தாரா.. குட்டி நந்தினி போட்ட சவால், கலைக்கட்டும் எதிர்நீச்சல்

விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ராஜி

என்னுடைய வாழ்க்கையே உன்னாலே கெட்டுப் போச்சு. என் கண் முன்னாடி நிக்காத, என்கிட்ட பேசாத! எங்கேயாவது தொலைந்து போ!’ என்று விரட்டி அடிக்கிறார். மனமுடைந்த ராஜியை மீனாதான் சமாதானப்படுத்துகிறார். ‘ஒரு பிரச்சனையை உருவாக்குவது சுலபம். ஆனால் அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். நீ ஏதாவது செய்ய நினைத்திருந்தால், உனக்கும் கதிருக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பே செய்திருக்கணும்.

இப்போது புதிதாக உன்னால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. கதிர் நிலைமையிலிருந்து அவரை புரிந்து கொள்’ என்று மீனா ராஜிடம் எடுத்து சொல்கிறார். இந்த சீரியலில் கதிர், ராஜி இருவரையுமே பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. இனி வரும் நாட்களில், என்ன நடந்தது என்ற உண்மை ஒவ்வொருவருக்காக தெரியப்படுத்தி சஸ்பென்சை உடைக்க போகின்றனர்.

Also Read: தமிழ் புதல்வன் தொடங்கி வட சென்னை வளர்ச்சி வரை.. தமிழக பட்ஜெட் 2024-25 இல் கவனிக்க வேண்டிய திட்டங்கள்

Trending News