வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதிரை விடாப்பிடியாக துரத்தி அதிகாரம் பண்ணும் ராஜி.. பாண்டியனுக்கு எதிராக சரவணனை திருப்பிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவை பார்த்து பேசுவதற்காக மீனா ஆபீஸ்க்கு மீனாவின் அம்மா போயிருக்கிறார். அப்படி இருவரும் சேர்ந்து பேசும்பொழுது கதிர் விஷயத்தைப் பற்றி மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா, கதிர் மீது எந்த தவறும் இல்லை, அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக கதிர் தந்திரமாக செயல்பட்டு இருக்கிறார் என்று கதிரை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு நீ அந்த வீட்டில் எப்படி இருக்கிறாய் என்று மீனாவின் அம்மா கேட்கிறார். அதற்கு மீனா, நம்ம வீட்டில் எப்படி இளவரசியாக இருந்தனோ அதே மாதிரி என் மாமியார் வீட்டிலும் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரு இளவரசியாக தான் இருக்கிறேன். என்னை பற்றி நீ கவலைப்பட தேவையில்லை, அப்பா பார்த்து வைத்த மாப்பிள்ளை கூட இவ்ளோ சசந்தோசமாக இருந்திருப்பேனா என்று தெரியல.

ஆனால் இப்பொழுது ரொம்ப சந்தோஷமாக என்னுடைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறேன் என்று சொல்லி மீனா, அவருடைய அம்மாவின் மனசை குளிர வைத்து விட்டார். அடுத்ததாக மீனா கொண்டு வந்த சாப்பாட்டை அம்மாவிடம் கொடுத்து சாப்பிட சொல்கிறார். இதை மாமியாவிற்கு வீடியோ காலில் போன் பண்ணி காட்டுகிறார். உடனே கோமதி ரொம்பவே சந்தோஷப்பட்டு என் சம்பந்தி என்னுடன் பேச ஆரம்பித்து விட்டார்.

இன்னும் கூடிய சீக்கிரத்தில் நாங்கள் ஒரே குடும்பமாக மாறிவிடுவோம் என்று குழலி, ராஜி மற்றும் தங்கமயில் இடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அப்பொழுது அங்கே வந்து செந்தில் இடம் மீனாவின் ஆபீஸ்க்கு என்னை கூட்டிட்டு போ என்று சொல்லி சம்பந்திக்கு தேவையான பலகாரத்தையும் எடுத்துட்டு கோமதி போகிறார்.

அங்கே போனதும் மீனாவின் அம்மாவிடம் பேசிவிட்டு பலகாரத்தையும் கொடுத்துவிட்டு செந்தில் உங்களுக்காக அரசாங்க வேலையில் சேர்வதற்காக பரிச்சை எழுதி இருப்பதையும் சொல்கிறார். இதை கேட்டதும் மீனாவின் அம்மா சந்தோசப்பட ஆரம்பித்து விட்டார். பிறகு மீனாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டே பஸ் ஏற்றி விடுவதற்கு செந்தில் போய் விடுகிறார்.

அடுத்ததாக தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு கொடுக்க போகிறார். அப்படி சாப்பாடு பரிமாறும் பொழுது நான் வேலைக்கு போகவில்லை. எனக்கு அப்படி வேலை பார்ப்பதும் பிடிக்காது, வீட்டில் இருந்து உங்களையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு சந்தோசம் என்று சில விஷயங்களை சொல்லி சரவணன் மனசை மாற்றுகிறார்.

உடனே சரவணன், சரி போக வேண்டாம் நான் அப்பாவிடம் பேசிக்கொள்கிறேன் என்று தங்கமயிலுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்துவிட்டார். இதைக் கேட்டு தங்கமயில் சந்தோசத்தில் அம்மாவுக்கு போன் பண்ணி எனக்கு சப்போர்ட் பண்ணி என் வீட்டுக்காரர் மாமாவிடம் பேசி வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லப் போகிறார் என சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

அடுத்ததாக ராஜி மற்றும் கதிர் மட்டும் தனியாக வீட்டில் இருப்பதால் கதிரை சாப்பிட வைக்க ராஜி கூப்பிடுகிறார். ஆனால் கதிர் இப்போ எனக்கு வேண்டாம் என்று சொல்லிய நிலையில் ராஜி விடாப்பிடியாக கதிரை சாப்பிட கூப்பிடுகிறார். கதிர் மறுத்த நிலையில் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடும் அளவிற்கு வீட்டிற்குள்ளேயே ஓடிக் கொண்டு அட்ராசிட்டி பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதுவும் நல்லா தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப இருவரும் சொல்லாமலேயே காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்

- Advertisement -

Trending News