சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நரசிம்மா, மேத்யூக்காக ரஜினிகாந்த் செய்த வேலை.. 3வது அவதாரம் எடுத்த சூப்பர்ஸ்டார்

வேட்டையன் படம் சூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ரஜினி இந்த படத்திற்காக இப்பொழுது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் லோகேஷ் கனக ராஜின் கூலி படத்தையும் முடித்து விடுவார். அடுத்து மூன்றாவது ப்ராஜெக்ட்டுக்கும் ரெடியாகிவிட்டார்.

அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு ரெடியாகும் படி நெல்சனிடம் கூறியுள்ளார். கூடிய விரைவில் படம் பூஜையுடன் தொடங்கவிருக்கிறது. ரஜினி அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க வேண்டும் என கராராய் கூறிவிட்டாராம்.

முதல் பாகம் கிட்டத்தட்ட 600 கோடிகள் வசூலித்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஒரு பெரும் தொகையை லாபமாக பார்த்தது. விலை உயர்ந்த கார் ஒன்றை ரஜினிக்கு பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன். அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் கார் கிடைத்தது.

3வது அவதாரம் எடுத்த சூப்பர் ஸ்டார்

முதல் பாகத்தில் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் இருவரும் நடித்திருந்தார்கள். இருவருக்கும் படத்தில் பெரிய வேலை இல்லாவிட்டாலும் அவர்கள் வரும் காட்சிகள் அனல் பறந்தது. மேத்யூ கதாபாத்திரத்தில் மோகன்லாலும், நரசிம்மன் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமாரும் நடித்திருந்தனர்.

இப்பொழுது ஜெயிலர் இரண்டாம் பாகத்தில்இவர்கள் நீண்ட நேரம் திரையில் வருமாறு காட்சிகளை அமைக்க சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். மோகன்லால், சிவராஜ் குமார் இரண்டு பேருக்கும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம். இதனால் இவர்களின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Trending News