செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி போட்ட விதைதான் இப்போ நீங்க சாப்பிடுறீங்க! அஜித், விஜய்யை கொண்டாட தலைவர் போட்டு கொடுத்த ரூட்

கோலிவுட்டில் மட்டுமல்ல உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரின் படங்களும் அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆகிறது. இவர்களது படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இன்டர்நேஷனல் அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் அவ்வளவு சீக்கிரம் தமிழ் நடிகர்களால் இந்தியாவின் பார்டரை தாண்ட முடியவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து ரஜினி போட்ட விதைதான் இப்போது அஜித், விஜய் போன்ற நடிகர்கள் ருசித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இப்போது கூட கனடாவில் எம்ஜிஆர் யார் எனக் கேட்டால் கூட அங்கு இருப்பவர்களுக்கு தெரியாது.

Also Read: ஜெயிலரை ஒரு கை பார்த்துவிட்டு ரஜினி செய்யும் வேலை.. ஏர்போர்ட்டில் சிக்கிய சூப்பர் ஸ்டார்

அதேபோல் தமிழகத்தில் நடிப்பில் ஜாம்பவானாகவும் மாஸ் ஹீரோவாகவும் இருந்த  எம்ஜிஆரும் பிற நாட்டில் பேமஸ் ஆக முடியவில்லை. அவர்களால் உலக அளவில் தமிழ் சினிமாவை கொண்டு செல்ல திணறினார்கள். ஆனால்  அவற்றையெல்லாம் தூள்தூளாக உடைத்தெறிந்து  தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் ரஜினியின் படம் மட்டும் தான் முதன்முதலாக வெற்றி பெற்றது.

அதன் பிறகு இந்திய எல்லைகளையும் கடந்து ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் தமிழ் நடிகரின் படம் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறாக  கலக்கியது என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமாகத்தான் இருக்கும். அவர் போட்ட விதைதான் இப்போது  கோலிவுட்டின் இளம் நடிகர்களின் நல்ல நல்ல படங்கள் அனைத்தும் உலக அளவில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது.

Also Read: ரஜினி, கமலை ஓரங்கட்டிய நடிகர்.. ஒரு மணி நேரத்திற்கு வாங்கிய சம்பளம்

அன்று ரஜினி போட்ட விதைதான் இப்போது விஜய், அஜித் போன்ற தமிழ் ஹீரோக்களால் உலக அளவில் பிரபலமாக முடிகிறது. அது மட்டுமல்ல உலக அளவில் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய ரஜினியின் படங்கள் அனைத்தும் எந்தவித சோசியல் மீடியாவின் உதவி இல்லாமல்  வெளிநாடுகளில் இருக்கும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

எல்லா காலகட்டங்களிலும் ரஜினியின் படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இவருடைய படங்கள் மட்டுமல்ல தமிழ் படங்கள் அனைத்தும் உலக அளவில் திரையிடப்படுகிறது என்றால், அதற்கு முதல் காரணம் ரஜினி தான். போட்ட ரோட்டில் பல பேர் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரோடு போட்டது தலைவர்தான்.  சூப்பர் ஸ்டார் போட்டுக் கொடுத்த ரூட்டில் தான் இப்போது அஜித், விஜய் இருவரையும் உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் ரஜினி ரசிகர்களை மேலும் கெத்து காட்ட வைக்கிறது.

Also Read: அஜித்துக்கு ஓகே விஜய்க்கு நோ.. தளபதியுடன் ஜோடி சேர மறுத்த உலக அழகி

Trending News