ஒரு நடிகரின் வசூலை முடிவு செய்வது அந்த படத்தில் நடித்துள்ள ஹீரோக்கள் தான். அதிலும் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக ரஜினிகாந்த் இருந்தார். ஒரு படம் முடிந்து பின் அவருடைய படங்களுகாகவே பல தயாரிப்பாளர்களை காத்து இருப்பார்கள்.
ஏனென்றால் மினிமம் கியாரண்டி என்ற அளவிலும் இல்லாமல் கண்டிப்பாக ஒரு வசூல் உண்டு. அது தோல்வி படமாக இருந்தாலும் கூட அதில் பெரிய அளவிற்கு இருக்காது. கடந்த இருபத்தைந்து வருஷம் ரஜினி படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதில் தான் மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கும்.
சன் பிக்சர்ஸ் ஆக இருந்தாலும் சரி, லைக்கா போன்ற பெரிய நிறுவனமா இருந்தாலும் சரி ரஜினிதான் முடிவு செய்வார். ரஜினியால் மூடிய கம்பெனிகளில் பல கம்பெனிகள் திறந்தே இருக்கின்றன. தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர் சன் நிறுவனமான கலாநிதிமாறன் கம்பெனிதான். ஏனென்றால் ரஜினியை வைத்து எப்படி வசூலை வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
அண்ணாத்த படம் முடிந்தபின் அடுத்து ரஜினி நடிக்கப்போகும் படமும் அதன் தயாரிப்பாளர்களும் இப்பவே கலந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ரஜினி கையில் இருந்த தயாரிப்ப்பாளர் லிஸ்ட் மிகவும் குறைவு. ஏன் என்றால் ரஜினி சம்பளத்தை வைத்தே 5 படங்கள பண்ணிடலாம். இதன் நடுவில் புகுந்த ரஜினியின் மகள்கள் தனுஷை வைத்து படம் எடுக்குமாறு பலமுறை கேட்டு வந்தனர். ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் நடித்து விட்டதால் ரஜினி யோசிக்கிறார்.
அண்ணாத்த படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகரும், ரஜினியின் மருமகனுமான நடிகர் தனுஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஜினியின் 170வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி எனும் படத்தை இயக்கி ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்துள்ளார். எனவே நிச்சயம் இப்படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் எதிர்பார்த்த வசூலை அள்ளாததால் அடுத்ததாக ஒரு வெற்றிப்படத்தை வழங்க முடிவு செய்தார். அண்ணாத்த படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் ரஜினிக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
