வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்த ரஜினி பட நடிகை.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

Rajini Movie Actress: காதல், கல்யாணம் என்ற காலம் போய் தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கை சாதாரணமாக மாறிக்கொண்டே வருகிறது. முக்கியமாக இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அதாவது மனம் ஒத்து போனதால் திருமணம் ஆகாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருவார்கள்.

அதன் பிறகு இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டால் அப்படியே பாய் பாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறலாம். இதற்காக விவாகரத்து கேட்டு எந்த கோட்டுக்கும் போக தேவையில்லை என்பதால் முக்கால்வாசி இதையே பாலோ பண்ணி வருகிறார்கள். ஆனால் இந்த விஷயங்கள் இப்பொழுது தான் காதுப்பட கேட்கிறோமே தவிர அந்த காலத்திலேயே இதெல்லாம் கமுக்கமாக செய்து வந்திருக்கிறார்கள்.

Also read: ரஜினி பட்ட கஷ்டத்தை கால் தூசி கூட பட்டிருக்க மாட்டாரு.. அவரு சூப்பர் ஸ்டாரா ? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

அப்படித்தான் 80ல் தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுலக்ஷ்னா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட போன்ற அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அத்துடன் ரஜினிக்கு ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு மற்றும் கமல் படத்தில் தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனான இயக்குனர் கோபி கிருஷ்ணனை காதலித்து வந்தார். ஆனால் இவர்களுடைய காதலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் சம்மதம் கொடுக்காததால் இவர்கள் திருமணம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு சுலோக்ஷனா நம்மளுடைய காதலை இப்படியே விட்டு விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

அத்துடன் உங்கள் வீட்டில் சொன்னபடி வேற யாரையாவது நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் விடாப்பிடியாக கல்யாணம் செய்தால் உன்னை தான் பண்ணுவேன் என்று ஒத்த காலில் நின்று இருக்கிறார். அப்பொழுது ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு பண்ணிட்டு கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முன்னதாகவே ஒரு தனி வீட்டில் இவர்கள் இருவரும் ஒரு மாதம் வரை கல்யாணம் ஆகாமலையே லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கையை நடத்திருக்கிறார்கள். அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்து எம் எஸ் விஸ்வநாதன் வீட்டில் நடிகை சுலோக்ஷனாவை மருமகளாக ஏற்று கொண்டார்கள். ஆனால் கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது நடிகை சுலக்ஷ்னா தனியாக வாழ்ந்து வருகிறார்.

Also read: இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

Trending News