அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் சினிமாவில் இன்றளவும் இணைபிரியா நண்பர்களாக கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கின்றனர். 1987-லில் வெளிவந்த கமல் படத்தை பார்த்து மிரண்டு போய் உள்ளார் ரஜினிகாந்த்.
1987 கமலஹாசன், சரண்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் நாயகன். இளையராஜாவின் இசையில் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கமலஹாசனின் திரை வாழ்க்கையில் இன்றளவும் பெருமையாக பேசப்படக்கூடிய படம் நாயகன்.
இந்த படத்தை பார்த்து பின் ரஜினிக்கு தூக்கம் போய்விட்டதாம். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார் கமலஹாசன். கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது நாயகன் திரைப்படம். இந்த படத்தை ஹிந்தியில் Dayavan என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த மனிதன் படம் வெளிவந்துள்ளதாம். அதற்கு முந்தின நாள் ரஜினிகாந்த் கமலஹாசனின் நாயகன் படத்தை பார்த்து ‘மனிதன்’ படம் ஓடுமா என்ற அளவுக்கு குழப்பத்தில் இருந்தாராம்.
இதனை பிரபல தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலம் முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தை சந்தித்த ரஜினி, நாயகன் படத்தை பார்த்தேன் மிரண்டு போய்விட்டேன் இதனால் மனிதன் படம் ஒரே நேரத்தில் வந்தால் கண்டிப்பாக ஓடுமா என்பது சந்தேகம் தான் என்று கூறி உள்ளார்.
இதற்கு பதிலளித்த பஞ்சு அருணாச்சலம் மனிதன் படம் கமர்சியல் படம், அதுவும் உங்க ஸ்டைலுக்கு கண்டிப்பாக வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறும் என்று தெரிவித்துள்ளார். உடனே ரஜினி அப்படி வசூல் ரீதியாக இரண்டு படங்களும் ஒரே மாதிரி வெற்றி பெற்றால் கண்டிப்பாக உங்க தயாரிப்பில் இன்னொரு படம் நடிப்பதாக உறுதி அளித்துள்ளார், அப்படி உருவான படம் தான் குருசிஷ்யன்.