வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி, இளையராஜா கூட்டணியில் வெற்றி கண்ட 6 பாடல்கள்.. ஒரே ஒரு பாட்டில் மொத்தமாய் ஸ்கோர் செய்த சூப்பர் ஸ்டார்

Actor Rajini: சமீபத்தில் ரஜினி நடித்து கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கண்டுள்ளது. இந்நிலையில் ரஜினி இளையராஜா கூட்டணியில் இடம் பெற்ற 6 பாடல்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

80-90 காலகட்டத்தில் ஹீரோக்களின் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதேபோல் ஹீரோ என்ட்ரிக்கு ஒரு பாடல், ஹீரோவின் சூழ்நிலையை வெளிப்படுத்தும் பாடல் என பல பாடல்களை இசையமைத்து கொடுத்து வெற்றி கண்டவர் இசைஞானி இளையராஜா.

Also Read: தர லோக்கலான கதாபாத்திரத்திற்கு பெயர் போன 6 வில்லன்கள்.. தனுசுக்கே தண்ணி காட்டிய விநாயகன்

இவரின் பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனவா என எதிர்பார்த்து படம் வாங்கிய விநியோகஸ்தர்களும் உண்டு. அவ்வாறு தன் இசையினால் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இளையராஜா. ஒரே படத்தில் இடம் பெறும் அனைத்து பாடலுக்கும் இசையமைத்த பெருமையும் இவரையே சேரும்.

அவ்வாறு கமல், ரஜினி என முக்கிய பிரபலங்களை குறிவைத்து இசை அமைத்து வந்த இவர் ரஜினிக்காகவே பாடிய பாடல் என்னவென்று தெரியுமா?. 1985ல் வெளியான நான் சிகப்பு மனிதன் மாபெரும் வெற்றிக்கு இளையராஜாவின் பாடலும் ஒரு காரணம்.

Also Read: பாக்கியலட்சுமி சங்கத்தமே வேண்டாம், ஓட்டம் பிடித்த மருமகள்.. ராதிகாவிற்கு டஃப் கொடுக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்

இப்படத்தில் இடம் பெற்ற எல்லாருமே திருடங்கதான் என்ற பாடல் இளையராஜா இசையில் வெற்றி கண்டது. மேலும் சிவா படத்தில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை தலைமுழுகி என்ற பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 1990ல் 175 நாட்கள் திரையில் ஓடி வெற்றி தந்த படம் தான் பணக்காரன். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது.

மேலும் 1993ல் ரஜினியின் இயக்கத்தில் வெளிவந்த வள்ளி படம் பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் இடம் பெற்ற என்ன என்ன கனவு கண்டாயோ பாடலும் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டவை தான். அதை தொடர்ந்து கழுகு படத்தில் பொன்னோவியம் கண்டேன் அம்மா என்ற பாடலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் அமைந்தாலும், பணக்காரன் படத்தில் வரும் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடல் மட்டுமே ரஜினிக்காகவே பாடியவாறு இடம் பெற்று புகழ்பெற்றது.

Also Read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள 8 படங்கள்.. தியேட்டரில் சோடைபோன பீட்சா 3

Trending News