செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரே மேடையில் மல்லுக்கட்ட போகும் ரஜினி, கமல்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்தினம்

மணிரத்தினம் தனது பல வருட கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Also Read :பொறாமையில் பொங்கிய விக்ரம், கார்த்தி.. ஜெயம்ரவிக்கு வாரிக் கொடுத்த மணிரத்தினம்

இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த விழாவுக்கு இரண்டு சினிமா ஆளுமைகள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இரண்டு மிகப்பெரும் ஜாம்பவான்களான ரஜினி, கமலை படத்தின் ப்ரோமோஷனுகாக மணிரத்தினம் அழைத்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி, கமல் இருவரையும் ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read :நாலா பக்க வசூலுக்கு பலே திட்டம் போட்ட மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபலம்

இதனால் தற்போதே பொன்னியின் செல்வன் படம் கலைக்கட்டி உள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் தமிழ் பதிப்பிற்கு பின்னணி குரல் கமலஹாசனும், மலையாள பதிப்பிற்கு மோகன்லாலும் கொடுத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ட்ரெய்லர் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். இவ்விழா மேடையில் மணிரத்தினம் எதிர்பார்ப்பை எதிற செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read :ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய பொன்னியின் செல்வன்.. RRR, KGF-ஐ ஓரங்கட்டிய மணிரத்னம்

Trending News